தமிழ் சினிமாவில் பத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. முதல் படத்திலேயே விஜய்யுடன் நடித்து வெற்றி கண்டார். இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான பட வாய்ப்புகள் குவிந்தன.
ஆனால் பூமிகா மற்ற மொழிகளில் கவனம் செலுத்தியதால் தமிழ் மொழியில் ஏகப்பட்ட படங்களில் நடிக்காமல் மற்ற மொழி படங்களில் அதிகம் நடித்தார்.பல வருடங்களுக்கு பிறகு தான் சூர்யா நடிப்பில் உருவான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ்சினிமாவில் பூமிக்கு அதற்கு என்று தனி இடம் கிடைத்தது. ஆனால் பூமிகா சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகு 4, 5 சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது கண்ணை நம்பாதே எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது சமூக வலைதளப் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த பல இயக்குனர்கள் காதல் கதை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறீர்களா என கேட்டுள்ளனர். முதலில் சரி என ஒப்புக் கொண்ட பூமிகா முழுமையாக கேட்டுவிட்டு தயவு செய்து அதில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
பத்திரிகைகளுக்கு கவர்ச்சி புகைப்படங்கள் நடிக்க தயார் ஏன் படுக்கை அறை காட்சிகள் கூட நடிக்க தயார். ஆனால் நீங்கள் முத்த காட்சியில் நடிக்க சொல்கிறீர்கள் அது மட்டும் என்னால் இப்போதைக்கு செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

அதற்கு காரணம் பூமிகாவின் வயது தான், இந்த வயதில் முத்த காட்சியில் நடித்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதால் அதனை நடிக்க தயாராக இல்லை என வெளிப்படையாகவே கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் தான் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.