Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-tv-bharathikannamma

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குழந்தையிடம் சஸ்பென்ஸை உடைத்த கண்ணம்மா.. இப்பவாது ஒரு எண்டு கார்டு போடுங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் பாரதி, கண்ணம்மா இருவருக்கும் ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரட்டை குழந்தை உள்ளது.

ஆனால் கண்ணம்மாவின் நடத்தை மீது சந்தேகப்பட்ட பாரதி, கண்ணம்மாவை ஒதுக்கி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் சொந்த குழந்தையான ஹேமாவை தத்தெடுத்து வளர்ப்பதாக நினைக்கிறார் பாரதி. கண்ணம்மாவுடன் வளரும் குழந்தை லட்சுமி.

கண்ணம்மாவிடம் லட்சுமி அடிக்கடி தன் தந்தையார் என கேட்டு நச்சரித்து வருகிறார். இதனால் கண்ணம்மா தன் பிறந்த நாள் அன்று லட்சுமின் அப்பா யார் என்பதை அனைவருக்கும் தெரிய படுத்துவதாக கூறி உள்ளார். இதனால் லட்சுமி மிகுந்த ஆவலுடன் உள்ளார்.

கண்ணம்மாவின் பிறந்தநாளுக்காக அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் தன்னுடைய அப்பா இன்னும் வரவில்லையே என்ற குழப்பத்தில் லட்சுமி உள்ளார். அப்போது கண்ணம்மா இதோ நிக்கிறாரே டாக்டர் பாரதி இவர் தான் உன்னோட அப்பா என சொல்கிறாள்.

இதைக் கேட்டு பாரதியின் அப்பா, சௌந்தர்யா, வெண்பா, பாரதி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதேபோல் லட்சுமியும் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த உண்மை தெரிந்ததால் மீண்டும் பாரதி, கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ்வார் இல்லை நான் உன் அப்பாவே இல்லை என லட்சுமி இடம் கோபப்பட அங்கிருந்து போக போகிறாரா என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

பல வருடமாக ஜவ்வாக இழுத்த இந்த சஸ்பென்ஸை ஒருவழியாக பாரதிகண்ணம்மா இயக்குனர் உடைத்துள்ளார். பல நாள் இந்த எபிசோடுகாக ரசிகர்கள் காத்திருந்தனர். ஒருவேளை இது கண்ணம்மாவின் கனவாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

Continue Reading
To Top