Connect with us
Cinemapettai

Cinemapettai

பாகுபலி பிரபாஸை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் கேட்டு ஷாக்கான திரையுலகம்.!

prabhas

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி பிரபாஸை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் கேட்டு ஷாக்கான திரையுலகம்.!

தெலுங்கு இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான படம்தான் பாகுபலி. இப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் பாகுபலி படத்திற்கு கிடைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அனைத்து விதமான ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இப்படம் தற்போது வரை இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும் ராணா நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு படத்தில் நடித்த நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேலும் நடிகர்களின் நடிப்பும் பாராட்டை பெற்றது.

உண்மையில் கூறவேண்டுமென்றால் இப்படத்தின் மூலமாகவே நடிகர் பிரபாஸுக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதுவரை சாதாரண நடிகராக வலம் வந்த பிரபாஸ் பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இமாலய நடிகராக மாறினார். இந்திய அளவில் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகினர். அதுமட்டுமின்றி மிகச்சிறந்த ஆண்மகன் பட்டியலிலும் பிரபாஸ் இடம் பிடித்தார்.

இதற்கு காரணம் பாகுபலி படத்தில் பிரபாஸ் வைத்திருந்த கட்டுமஸ்தான உடல் கட்டு தான். ஆனால் சமீபத்தில் இணையதளங்களில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபாஸ் தாறுமாறாக உடல் எடை கூடி பார்ப்பதற்கு அங்கிள் போன்று தோற்றம் அளிக்கிறார். பாகுபலி படத்தில், வாட்ட சாட்டமாக தோன்றி பல பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட பிரபாஸா இது என அவரது ரசிகைகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மற்றொருபுறம் இப்போதெல்லாம் இயக்குனர் ராஜமெளலி படத்தில் நடித்தால் கதாநாயகனுக்கு லுக் போய்விடுகிறது என்றும், இந்திய அளவில் பெரிய மார்க்கெட் கிடைத்தாலும் லுக்கில் எதோ பாதிப்பு உண்டாகிறது என்றும், பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் முகமே மாறிவிட்டது. இப்போது Jr.NTR & ராம்சரண் முகமும் மாறி வருகிறது என கூறி வருகின்றனர்.

prabhas-rajamouli

prabhas-rajamouli

தற்போது நடிகர் பிரபாஸ் நடிக்கப்போகும் ஆதிபுருஷ் படத்திற்காக ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்க உடல் எடையை கூட்டி வருகிறாராம். தன் தொழிலுக்காக உடலை வருத்தி உழைக்கும் நல்ல மனிதரை இப்படி ட்ரோல் செய்வது தவறு என்று சில ரசிகர்கள் பிரபாஸ்க்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top