தம்பியை விட்டு கொடுக்காத அண்ணன்.. விசு மற்றும் கிஷ்மு நடிப்பில் கலக்கிய 7 படங்கள்

விசு வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவருடைய பெரும்பாலான படங்கள் குடும்ப சென்டிமென்ட் கதையாகத்தான் இருக்கும். இவருடைய சகோதரர் கிஷ்மு, விசு இயக்கிய மணல் கயிறு படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். விசு மற்றும் கிருஷ்ணா நடிப்பில் வெளியான 8 படங்களை பார்க்கலாம்.

மணல் கயிறு : 1982 ஆண்டு விசு இயக்கத்தில் மனோரமா எஸ் வி சேகர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மணல் கயிறு. இப்படத்தில்தான் விசு தனது சகோதரர் கிஷ்முவை அறிமுகம் செய்து வைத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார் கிஷ்மு. மேலும் இப்படம் 100 நாட்களை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சம்சாரம் அது மின்சாரம் : விசு, லட்சுமி, ரகுவரன் மனோரமா மற்றும் பலர் நடிப்பில் 1986 இல் வெளியான திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இப்படத்தில் விசுவின் சம்மந்தி ஆல்பர்ட் பெர்னாண்டஸ் ஆக கிஷ்மு நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி அடைந்தது.

சிதம்பர ரகசியம் : விசுவின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட படம் சிதம்பர ரகசியம். இப்படத்தில் விசு, எஸ் வி சேகர், டெல்லி கணேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் காட்டமுத்து செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் கிஷ்மு நடித்திருந்தார்.

வரவு நல்ல உறவு : விசு இயக்கத்தில் எஸ் வி சேகர், ரேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வரவு நல்ல உறவு. இப்படத்தில் விசு அம்பலவாணன் என்ற கதாபாத்திரத்திலும் அவருடைய சிறந்த நண்பர் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் கிஷ்முவும் நடித்திருந்தார். இப்படமும் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

திருமதி ஒரு வெகுமதி : விசு இயக்கத்தில் பாண்டியன், எஸ் வி சேகர், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடிப்பில் 1987 வெளியான திரைப்படம் திருமதி ஒரு வெகுமதி. இப்படத்தில் விசு நாகர்கோவிலில் நாதமுனி ஆகவும் அவருடைய தம்பி கிஷ்மு சத்தியமூர்த்தி ஆகவும் நடித்து இருந்தனர். குடும்பப் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வேடிக்கை என் வாடிக்கை : விசு இயக்கத்தில் எஸ் வி சேகர், பல்லவி, டெல்லி கணேஷ், மனோரமா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேடிக்கை என் வாடிக்கை. இப்படத்தில் கிஷ்மு மத்ருபூதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

பெண்மணி அவள் கண்மணி : விசு திரைக்கதை மற்றும் இயக்கத்தில் பிரதாப் போதன் சீதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெண்மணி அவள் கண்மணி. இப்படத்தில் வடிவுகரசியின் கணவராக கிஷ்மு நடித்திருந்தார். இப்படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்