யாரும் மிஸ் பண்ணிடாம பார்க்க வேண்டிய 10 மலையாள ஹிட் படங்கள்.. எப்போதும் ராஜாவாக வலம் வரும் மோகன்லால்

10 Best Malayalam Movies: மலையாள படங்கள் பெரும்பாலும் இந்திய சினிமா ரசிகர்களால் அதிக அளவு ரசித்து பார்க்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த படங்களின் காட்சி அமைப்பு மற்றும் எதார்த்தமாக நடிக்கும் நடிகர்கள் தான். சமீபத்தில் ரிலீசான இந்த பத்து மலையாள படங்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒன்று.

2018: இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் தான் 2018. கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

புலிமுருகன்: இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ரிலீசான படம் புலி முருகன். கிராமத்தில் தொல்லைகள் ஏற்படும் பொழுது, அந்த புலியை வேட்டையாடி கிராமத்தை காப்பாற்றும் முருகன் என்ற கேரக்டரில் மோகன்லால் நடித்திருப்பார். அவரை மையப்படுத்தி நடக்கும் படத்தின் கதை தான் இது.

Also Read:அடுத்த மூணு வருஷத்துக்கு வரிசை கட்டி நிற்கும் தனுஷின் 5 படங்கள்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா வட சென்னை 2?

லூசிஃபர்: நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வெளியான திரைப்படம் லூசிஃபர். இந்த படம் அரசியல் அதிரடி கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பீஷ்ம பர்வம்: இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம் தான் பீஷ்மபர்வம். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் கதையை மையமாகக் கொண்டது. படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு வசூல் சாதனையும் படைத்தது. ரிலீசான ஐந்தே நாட்களில் 50 கோடி வசூலித்த படம் இதுவாகும்.

குருப்: இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில், இந்திரஜித் சுகுமாரன் ஹீரோவாக நடித்த குருப் திரைப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். ஒரு கொலை குற்றவாளியின் வாழ்க்கை மற்றும், அந்த கொலையை சுற்றி நடக்கும் விசாரணையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

பிரேமம்: நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமா மட்டுமல்லாமல், இந்திய சினிமா ரசிகர்களை கட்டி இழுத்த படம் தான் பிரேமம். இந்த படத்தின் தாக்கம் இன்று வரைக்கும் இந்திய சினிமா ரசிகர்களிடம் இருக்கிறது.

Also Read:அடுத்தடுத்து 5 பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கும் சூர்யா.. கங்குவாவை மிஞ்சுமா லோகேஷ் கூட்டணி

காயம்குளம்கொசின்னி: நடிகர்கள் நிவின்பாலி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த படம் தான் காயம்குளம்கொசின்னி. சுதந்திர இந்தியாவிற்கு முன்னால் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ரோமாஞ்சம்: இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான படம் தான் ரோமாஞ்சம். பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழு இளைஞர்கள் இறந்தவர்களுடன் பேச முயற்சிப்பதால் ஏற்படும் விளைவை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

த்ரிஷ்யம்: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்த படம் த்ரிஷ்யம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆர்டிஎக்ஸ்: மலையாளத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் படம் ஆர் டி எக்ஸ். கடந்த மாதம் இறுதியில் ஓணம் கொண்டாட்டத்தை ஒட்டி ரிலீஸ் ஆன இந்த படம் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

Also Read:தன் கையை வைத்தே கண்ணை குத்தப் போகும் ரஜினி.. ஐஸ்வர்யாவால் விழி பிதுங்கி நிற்கும் சூப்பர் ஸ்டார்

Next Story

- Advertisement -