அடுத்தடுத்து 5 பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கும் சூர்யா.. கங்குவாவை மிஞ்சுமா லோகேஷ் கூட்டணி

Surya Upcoming Movies: நடிகர் சூர்யா ஒரு ஹீரோவுக்கான மாஸ், கிளாஸ் என்பதை தாண்டி சமீப காலமாக தன்னை ஒரு சிறந்த நடிகனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அவருடைய கைவசம் இருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

சிறுத்தை சிவா: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா . இந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான புதிய முயற்சி என்று சொல்லலாம். 3d தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் இந்த படம் பான் இந்தியா மூவியாக, இந்திய மொழிகள் அத்தனையிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. நடிகர் சூர்யாவுக்கு இந்தப் படம் தான் முதல் பான் இந்தியா படமாகும். இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:நெத்தி பொட்டில் சுட்டு விளையாடும் ஜெயம் ரவி.. லோகேஷ்க்கு இணையாக தரமான 3 படத்தை கொடுத்த இயக்குனர்

லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விக்ரம் படத்தில் சில நிமிட காட்சிகள் என்றாலும், சூர்யாவை அனைவரும் கொண்டாடும் வகையில் ரோலக்ஸ் என்னும் கேரக்டரை கொடுத்திருந்தார். சூர்யாவுக்காக தனி படம் அவர் இயக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக இருந்தது. தற்போது இந்த கனவு கைகூடி வந்திருக்கிறது. ஏற்கனவே சூர்யாவை வைத்து லோகேஷ் திட்டமிட்டிருந்த இரும்பு கை மாயாவி கதை விரைவில் படமாக்கப்பட இருக்கிறது.

சுதா கொங்கரா: இயக்குனர் சுதா கொங்கரா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வந்தவர். இவர் இயக்கத்தில் சூர்யா முதன் முதலில் நடித்த சூரரைப்போற்று படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, உலக சினிமா அரங்கில் சூர்யாவுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தற்போது சூர்யா தன்னுடைய 43 வது படத்தில் மீண்டும் சுதாவுடன் இணைகிறார்.

Also Read:சூர்யாவின் கங்குவா படத்தின் அப்டேட்.. வைரலாகும் குரூப் புகைப்படம்

வெற்றிமாறன்: நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் வாடிவாசல். இதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. விடுதலை படத்தின் வேலைகள் முடிந்த பிறகு வெற்றிமாறன் இந்தப் படத்திற்கான பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா ரஞ்சித்: இயக்குனர் பா ரஞ்சித் நடிகர் கார்த்திக்கு மெட்ராஸ் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சமயத்திலேயே, சூர்யா ரசிகர்கள் ரஞ்சித்துடன் அவர் இணைய வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தனர். தற்போது சூர்யா மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் விரைவில் படம் பண்ண இருக்கிறார்கள்.

Also Read:ரகசிய சந்திப்பால் கோபத்தில் சூர்யா.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் செய்யும் அழிச்சாட்டியம்

- Advertisement -