அடுத்த மூணு வருஷத்துக்கு வரிசை கட்டி நிற்கும் தனுஷின் 5 படங்கள்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா வட சென்னை 2?

Dhanush Upcoming Movies: தமிழ் சினிமாவில் பயங்கர பிசியாக இருக்கும் நடிகர் என்றால் தனுஷ் தான். அடை மழை வெளுத்து வாங்குவது போல் இவருடைய படங்களின் அப்டேட் தான் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கிலும் அப்டேட் கொடுத்திருக்கும் தனுஷின் 5 லைன் அப் படங்களை பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில், கிறிஸ்மஸ் விடுமுறை கொண்டாட்டத்தின் போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

Also Read:பழைய செல்வராகவன் கதையை நோண்டி எடுத்த தனுஷ்.. அஜித் மறுத்ததால் 3 ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயாராகும் ஹீரோக்கள்

D50: பவர் பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷ் இரண்டாவது முறையாக தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நித்யா மேனன் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

D51: வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து தன்னுடைய 51வது படத்தில் பணியாற்ற இருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா தான் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தாராவி அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் என தெரிகிறது.

Also Read:தனுசுக்கு திறமையும் வளருது திமிரும் வளருது.. ஓவர் அடாவடியால் முகம் சுளித்த தங்கமான சீனியர் நடிகர்

வடசென்னை 2: இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் தனுஷ் நடித்த அத்தனை படங்களுமே தமிழ் சினிமாவின் அடையாளங்களாக தான் இருக்கிறது. இதில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய படம் வடசென்னை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விடுதலை 2 மற்றும் வாடிவாசல் படங்கள் முடிந்த கையோடு வெற்றிமாறன் இந்த படத்தின் வேலையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் படம்: இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா மற்றும் அத்ராங்கிரே என்ற இரண்டு வெற்றி படங்களை இந்து சினிமா உலகிற்கு கொடுத்திருந்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து இருக்கிறது. இந்த படம் ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.

Also Read:மாலத்தீவில் நடக்காதது ஜெயிலர் ரிலீஸில் நடந்து விட்டதே.. தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த முத்துவேல் பாண்டியன்

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -