Connect with us
Cinemapettai

Cinemapettai

bb ultimate

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸில் முதல்ல பட்ட அசிங்கமே போதும்.. கமலுக்கு பதில் கட்டுமஸ்தானை தரையிறக்கும் விஜய் டிவி!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த உலகநாயகன் கமலஹாசன் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்பிறகு அடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் மூன்று பேரின் பெயர் அடிபட்டுகிறது. ஏற்கனவே கமலஹாசன் கொரோனா சிகிச்சையில் இருந்தபோது தற்காலிகமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணன் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் கமலஹாசன் அளவிற்கு ரம்யாகிருஷ்ணனால் அந்த வேலையை சரியாக செய்ய முடியவில்லை என பலரும் கேலி கிண்டல் அடித்தனர். இதனால் மீண்டும் அந்தப் பெயர் தனக்கு வேண்டாம் என ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் தொகுப்பாளராக பணியாற்ற விரும்பவில்லை என மூஞ்சியில் அடித்தது போல் சொல்லிவிட்டாராம்.

அத்துடன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டதால், தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டிருக்கும் வனிதாவை மீண்டும் சமாளிக்க முடியாது என ரம்யா கிருஷ்ணன் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

அதன் பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் எனக் கேட்டபோது, அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இதை செய்ய முடியாது என மறுத்து விட்டாராம். மூன்றாவது தேர்வாக ஏற்கனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பணப்பெட்டியை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்ய வந்த சரத்குமாரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கவேண்டுமென பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

எனவே வரும் வாரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் எலிமினேட் ஆக போகின்றனர் என்பதை விட யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்பதை தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Continue Reading
To Top