இமானின் முன்னாள் மனைவி விட்ட சவால்.. பயில்வான் கூறிய பகிர் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் டி இமான். விசுவாசம், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி மோனிகா ரீச்செட் என்பவரை சமீபத்தில் விவாகரத்து செய்தார்.

இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இமானுக்கு இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் சமீபத்தில் இமானும் எமிலி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சங்கீதா, க்ரிஷ், குட்டி பத்மினி ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதாவது 12 ஆண்டுகளாக உனக்காக வாழ்ந்த என்னை மறந்து விட முடியுமா, உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்தனம் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இமானின் இரண்டாவது திருமணம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விதவைக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் இமான் என்று பேசிய பயில்வான், அதன் பிறகு அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் இமானுக்கு சவால்விட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது தானும் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் என்று மோனிகா கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையிலேயே மோனிகா ரிச்சர்ட் இமானிடம் இவ்வாறு சவால்விட்டாரா என்பது உறுதிபடத் தெரியவில்லை. ஆனால் பயில்வான் இவ்வாறு கூறியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட எமிலியின் தந்தை ஆர்ட் டைரக்டர் உபால்ட் பயில்வான் ரங்கநாதனின் நெருங்கிய நண்பர் ஆவார்.