18 வயசுல போட்டோ ஷூட், படவாய்ப்பு என நம்பி போயிடாதீங்க.. பதற வைத்த பயில்வான்

சினிமா என்ற போர்வையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கோடம்பாக்கம் போலிகள். தற்போது சினிமா மிக அதிகமாக மக்களிடம் சேர்ந்துள்ளது. அனைத்து தரப்பினரும் சினிமாவை தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா பிரபலங்களை பார்த்தால் தன்னை மறந்து குடும்பத்தை மறந்து ஒருவர் பின்னால் போக கூடாது தயாராக இருக்கிறார்கள் இன்றைய சமூகத்தில்.

அதுவும் குறிப்பாக இளைஞர்கள் அதாவது கல்லூரி பெண்கள். இதனைப் பயன்படுத்தி சென்னையில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கிய இடங்களில் வெளியூரிலிருந்து வரும் பெண்கள் அதாவது கிராமத்தில் இருக்கும் பெண்கள், வேலைக்காக வரும் பெண்கள், படிப்பை தொடர வரும் பெண்கள் பெண்களை குறிவைத்து இந்த தவறான நிகழ்வு நடைபெற்று வருகிறது.

சென்னையை நோக்கி வரும் பெண்களிடம் எதார்த்தமாக பேச்சுக் கொடுத்து நடிப்பதற்கு ஆசையா என்ற அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் போன்ற இடங்களுக்கு அழைத்து வந்து இதற்கென்று இருக்கும் சிறு லாட்ஜ்களில் தங்க வைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்து எப்படியாவது உல்லாசம் அனுபவித்து விடுகிறார்கள்.

ஒரு சிலர் பெரிய தயாரிப்பாளர்கள் என்று சொல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவரிடம் பெண்களை விற்று விடுகிறார்கள். இதனை செய்வதும் சினிமாவில் ஒரு காலத்தில் நன்றாக இருந்து இப்போது தோல்வியடைந்து பணத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் சக நடிகர்கள்.

போட்டோஷூட் என்று சொல்லியும் அழைத்துச்சென்று ஸ்டூடியோவில் சிசிடிவி கேமராவில் பெண்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டு அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி அவர்கள் மறுபடி மறுபடியும் அந்த தவறான செயல்களை செய்யத் தூண்டுகிறார்கள்.

அதாவது நடிக்க சான்ஸ் வாங்கித் தரேன் என்ற பெயரில் இந்த கேவலமான தொழில் இப்போது மிக வேகமாக சென்னையில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. சில பெண்கள் இந்த அவமானத்தை சொல்ல தயங்கி அசிங்கப்பட்டு விட்டு விட்டு விடுகிறார்கள் சில பெண்கள் சினிமாவே வாழ்க்கை அதுவே முக்கியம் என்று அதிலேயே தொடர்ந்து நம்பி இன்னும் வீணாக போய் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். எந்த டைரக்டரிடம் செல்ல வேண்டும் யார் முக்கியமானவர்கள் என்று தெரிந்து அதனை பயன்படுத்தி சினிமாவுக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் திறமையை நம்பி போராடுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் சொல்பவரை துளியும் நம்பாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்