தந்தையை அடிக்கும் வீடியோவை வெளியிட்ட எழில்.. பாக்கியலட்சுமி சீரியல் வைரலாகும் பதிவு

வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களைப் போன்றே, சின்னத்திரை சீரியல்களுக்கும் தங்களுடைய ஆதரவுகளை ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும், இளைஞர்களையும் இல்லத்தரசிகளையும் கவரும் வகையில் இருப்பது அந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகவே கருதப்படும்.

ஏனென்றால் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாமலும், சுவாரசியம் குறையாமலும் புது புது நிகழ்ச்சிகளை வழங்கி வருவதுதான் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற தொடர் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றாலும் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடராக மாறி வருகிறது.

ஏனென்றால் இல்லத்தரசிகள் அனுபவிக்கும் இன்னல்களை பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரம் வெளிப்படுத்துவதால், ரசிகர்களிடையே பெரிதும் பேசப்படும் கதாபாத்திரமாக மாறி வருகிறது. மேலும் பாக்கியலட்சுமியின் இளைய மகானான எழில் அம்மாவிற்கு உறுதுணையாக இருப்பார்.

அத்துடன் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி, தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால், அதனை அறிந்த எழில் கோபியை பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கோபி தொடர்ந்து தன்னுடைய தோழியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் ‘எழில் எப்போது தன்னுடைய கோபத்தை கோபியிடம் காட்டுவார்?’ என்பதை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, எழில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

vishal-bhakkiyalaxmi
vishal-bhakkiyalaxmi

ஏனென்றால் அந்த வீடியோவில் எழில் கோபியை கட்டிலில் தள்ளிவிட்டு அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளதால், இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் காட்சியானது வரும் வாரங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்