ரஜினிக்கு கதை சொல்லும் அட்லி.. பல வருடம் கழித்து இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அட்லி. என்னதான் இவரது படங்கள் அனைத்தும் பழைய படங்களின் காப்பி எனக் கூறினாலும் படத்தின் வெற்றி என்னமோ கூறிய வாய்களை அனைத்தையும் வாயடைக்க வைத்து விடுகிறது.

தமிழ் சினிமாவில் முதல் படத்தில் இருந்து தனது வெற்றியை பதிவு செய்து வருகிறார் அட்லி. முதல் படத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அதன் பிறகு விஜய் உடன் கூட்டணி அமைத்து தெறி படத்திலும் வெற்றி கண்டார். விஜய் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆன இயக்குனராகவும் மாறினார்.

ஆனால் இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றியது இயக்குனர் ஷங்கரிடம். எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு நண்பன் படத்திலும் சங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு சங்கரிடம் இருந்து ஒரு சில படத்தினை இயக்கும் முறைகளை கற்றுக் கொண்டார்.

rajinikanth atlee
rajinikanth atlee

எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது ரஜினிகாந்த்க்கு படத்தினை பற்றி சில கதைகளை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் அட்லி ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது என பலமுறை கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை அட்லி ரஜினிகாந்தை வைத்து படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் விரைவில் கண்டிப்பாக அட்லி ரஜினிகாந்தை வைத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுப்பார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -spot_img

Trending News