நீச்சல் உடையில் அதுல்யா? திணறத் திணற கவர்ச்சியை வாரி வழங்க முடிவு

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. முதலில் குறும்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் முழுநீள படமாக உருவாகிறது.

அந்த படத்தில் அநியாயத்திற்கு அடக்க ஒடுக்கமாக நடித்த இரண்டாவது படமான ஏமாளி படத்தில் அப்படியே மொத்தமும் மாறி அநியாய கவர்ச்சியில் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இந்த பொண்ணா இப்படி என பல பேரையும் மிரட்டி விட்டார் அதுல்யா ரவி.

அதன் பிறகும் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் இல்லை. இவ்வளவு நாள் சினிமாவில் இதுவரை வெறும் ஐந்து படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அந்த ஐந்து படங்களும் பெரிய அளவு வெற்றியை பெற்றதில்லை.

அடுத்ததாக அவர் முழுதும் நம்பியிருக்கும் திரைப்படம் என்றால் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தைத் தான். முன்னதாக இந்த படத்தின் பாடல்களில் அதுல்யா ரவி கவர்ச்சி காட்டி நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

அதை அப்படியே பிடித்து முன்னேறி விட வேண்டும் என தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் வலம் வர பச்சை கொடி காட்டி உள்ளதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகியுள்ளது.

அதுல்யா ரவியின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்கள், சின்ன சின்ன கவர்ச்சி போட்டோக்கள் ஆகியவை வெளியானாலே இணையத்தை ஆட்டிப்படைத்து விடும். அதிலும் இவர் நீச்சல் உடையில் நடித்த வீடியோ எல்லாம் வந்து விட்டால் இணையதளத்தின் கதியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

athulya-ravi-cinemapettai
athulya-ravi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்