வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விருமன் படத்தில் அதிதி செய்த 6 சாதனைகள்.. ஷங்கருக்கே அடையாளமான மகள்

கல்யாணி ப்ரியதர்ஷன், விஜயலக்ஷ்மி அகத்தியன் என இயக்குனரின் மகள்கள் சினிமாவில் நாயகிகளாக அறிமுகமாகி இருந்தாலும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் ஸ்பெஷலாகவே தெரிகிறார். அந்த ஸ்பெஷலுக்கு காரணம் தன்னுடைய முதல் படத்திலேயே அவர் செய்த இத்தனை சாதனைகள் தான்.

முதல் படத்திலேயே சொந்த குரலில் பாடி அசத்திய நடிகை: அதிதி தான் அறிமுகமாகும் முதல் படத்திலேயே சொந்த குரலிலும் பாடியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் விருமன் படத்தில் ‘மதுரை வீரன்’ பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிதி ஏற்கனவே கனி என்னும் தெலுங்கு படத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ என்னும் பாடலை பாடியுள்ளார்.

அறிமுகப் படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை: ஷங்கர் என்றாலே பிரமாண்டம் தான், ஒவ்வொரு படத்தையும் அதிக பட்ஜெட்டுடன் எடுக்கும் ஷங்கரின் மகளுக்கு முதல் படத்திலேயே சம்பளம் எவ்வளவு தெரியுமா 25 லட்சம். தனது முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர் தான். விருமன் திரைப்படம் சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை முழுக்க இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம்: பாவாடை -தாவணி , மிரட்டலான பேச்சு என அச்சு அசல் கிராமத்து பெண் போலவே இருக்கும் அதிதி ஷங்கர் ஸ்ரீ திவ்யா, லட்சுமி மேனனை அடுத்து கிராமத்து இளைஞர்களை தன் வசமாக்கி விட்டார். மதுரையில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. பொதுவாகவே கார்த்தியின் படங்களுக்கு தென் மாவட்டங்களில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

பருத்தி வீரன் பிரியாமணிக்கு நிகரான நடிப்பு: ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்தில் மாடர்ன் மங்கையாக வந்த ப்ரியாமணி ‘பருத்திவீரன்’ படத்தில் அப்படியே கிராமத்து பெண்ணாக வாழ்ந்து இருப்பார். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பிரியாமணியின் நடிப்பு அபாரமாக இருந்தது. அவருக்கு நிகரான நடிப்பை அதிதி தனது முதல் படமான ‘விருமன்’ படத்தில் வெளிக்காட்டி இருக்கிறார்.

நடனம் கற்றுக் கொள்ளாமலே நடனத்தில் அசத்திய அதிதி சங்கர்: எந்த விதமான நடன கலையும் அதிதி கற்றுக்கொண்டது இல்லையாம், ஆனால் அவர் இந்த படத்தின் பாடல்களுக்கு கார்த்திக்கு இணையாக ஆடியிருக்கிறார். ‘கஞ்சா பூ கண்ணால’ ‘மதுர வீரன்’ பாடல்களில் சிறப்பாக ஆடி அசத்தி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர்: அதிதி ஒரு எம்பிபிஎஸ் பட்டதாரி, எனினும் அந்த துறையிலிருந்து முற்றிலும் வேறுபாட்டை துறையான சினிமா துறையை மிகவும் தைரியமாக கையில் எடுத்து இருக்கிறார். சினிமாவிற்கு முன்பாக அதிதி மாடலிங் துறையில் இருந்தார்.

அதிதியின் இத்தனை சாதனைகளும் அவருக்கு சினிமா மீது உள்ள காதலையே வெளிப்படுத்துகிறது. விருமன் ரிலீசுக்கு முன்பே இவர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

- Advertisement -

Trending News