அடிக்கு மேல் அடி வாங்கும் அதர்வா.. இந்த வயசுல இவ்வளவு பிரச்சனையா.?

அதர்வா மீது சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சினிமா வட்டத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். அதர்வா நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு கிடைப்பதில்லை. அதனால் பல தயாரிப்பாளர்களும் அதர்வாவை வைத்து படத்தை தயாரிப்பதற்கு முன் வரத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால் படத்தை தயாரிக்கும் பல தயாரிப்புகளுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறி வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்கு வருவதும் மட்டுமில்லாமல் நடிகைகளிடம் அதிக ஜொள்ளு விட்டு வருவதாகவும் கூறி வருகின்றனர்.

அதர்வா அதிகளவு குடிபோதையில் ஈடுபடுவதாகவும் இதனால்தான் இவருக்கு தொடர்ந்து பல பிரச்சினைகள் வருகிறது. மேலும் இவரது நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை மேலும் அதர்வா நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதர்வாவை வைத்து முருகானந்தன் இயக்கிய குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதித்துள்ளனர் காரணம் இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் 2 கோடிக்கு கொடுக்காமல் உள்ளார். அதனால் தற்போது அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படத்தை வெளியிட தடை விதித்துள்ளனர்.

மேலும் அதர்வா படபிடிப்பில் பணியாற்றுபவர்கள் செய்யும் தவறு கூட அதர்வா மீதுதான் வருகிறது. இதனால் அதர்வா மனவருத்தத்தில் இருந்துள்ளார். அதர்வா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகமாக வருவதால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களும் அதர்வாவை வைத்து படங்கள் இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இப்படியே போனால் அதர்வாவின் சினிமா வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அவரது நெருங்கிய நண்பர்கள் அதர்வாவுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். சினிமாவில் அப்பாவிற்கு இருக்கும் பெயரை கெடுத்து விடக் கூடாது என்பதில் சில முன்னணி நடிகர்களும் அறிவுரை கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்