சார்பட்டா வெற்றி.. 4 வருடம் கழித்து தூசு தட்டப்படும் ஆர்யாவின் பிரம்மாண்ட திரைப்படம்

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் தான் ஆர்யாவின் கடைசியில் வெற்றி படம். அதன்பிறகு அவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே சொல்றதுக்கு ஒன்னும் இல்லை என்ற அளவுக்குத்தான் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

அந்த முயற்சியின் பலனாகத்தான் மகாமுனி என்ற நல்ல படம் அவருக்கு கிடைத்தது. மௌனகுரு சாந்தகுமார் இயக்கியிருந்த இந்த திரைப்படம் பெரிய வசூல் இல்லையென்றாலும் கதையை ரீதியாகவும் திரைக்கதை ரீதியாகவும் ரசிகர்களிடையே ஒரு விதமான ஆர்வத்தை தூண்டியது.

அதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான டெடி திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்று ஆர்யாவின் மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியது. மேலும் விஜய் டிவியில் வெளியிடப்பட்ட அந்த திரைப்படம் டிஆர்பியிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஆர்யாவின் சினிமா மார்க்கெட்டை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது என்று சொன்னால் மிகையாகாது. அமேசான் தளத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது.

இதனால் நான்கு வருடமாக பைனான்ஸ் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த ஆர்யாவின் பிரம்மாண்ட படம் ஒன்று விரைவில் தூசி தட்டப்பட்ட உள்ளதாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த நேரத்தில் ஆர்யாவை வைத்து அமீர் சந்தனத்தேவன் என்ற படத்தை எடுக்க இருந்தார்.

ஒரு மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது ஆர்யாவின் படங்கள் தொடர் வெற்றி பெற்று வருவதால் இந்த நேரத்தில் பைனான்ஸ் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என அமீர் அந்த படத்தை தூசி தட்ட உள்ளாராம். கடைசியாக அமீர் ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவன் என்ற படத்தை எடுத்திருந்தார். அதன்பிறகு நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் இயக்குனராக அமீரை ரசிகர்கள் மிஸ் செய்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

santhanathevan-cinemapettai
santhanathevan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்