ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

நிற்க நேரமில்லாமல் 5 படங்களுடன் பிசியான அருண் விஜய்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பாலாவின் கூட்டணி

பல வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் அருண் விஜய் ஒரு பெரிய வெற்றியை கொடுப்பதற்காக இன்னமும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு கடைசியாக வெளிவந்த யானை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை தேடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு இப்போது நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகி இருக்கிறது.

அதாவது அவர் இப்போது நிற்க கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் டாப் இயக்குனர்களின் திரைப்படங்களில் இவர் நடித்து வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இனிமேலாவது அவருடைய கேரியர் டாப் கியரில் செல்லும் என அவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது அவருடைய கைவசம் இருக்கும் ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

Also read: சமுத்திரக்கனி இயக்கி படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்.. ரூட்டை மாற்றி அக்கட தேசம் வரை சென்ற ரகசியம்

பார்டர் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா நடித்துள்ள இப்படம் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. எப்பவோ முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்த இந்த படம் சில பல காரணங்களால் இப்பொழுதுதான் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் அருண் விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

அக்னி சிறகுகள் நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி கூட்டணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் இவர்களுடன் இணைந்து அக்சரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர். முழு ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளிவர இருக்கிறது.

Also read: பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

அச்சம் என்பதில்லையே ஏ எல் விஜய் இயக்கி வரும் இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி பலரின் ஆவலையும் தூண்டி இருந்தது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த மூன்று படங்களை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகளும் இப்போது படுஜோராக நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பாலாவின் இயக்கத்திலும் இவர் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் அருண் விஜய்க்கு இந்த வருடம் சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

Also read: நட்புக்காக 10 பைசா வாங்காமல் நடித்துக் கொடுத்த 5 நடிகர்கள்.. எஸ்.ஏ.சி-காக கேப்டன் செய்த கைமாறு

- Advertisement -spot_img

Trending News