Connect with us
Cinemapettai

Cinemapettai

bhagyaraj

Entertainment | பொழுதுபோக்கு

பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 சிறந்த படங்கள்.

கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாக்யராஜ். சாதாரண முருங்கைக்காயை வைத்தே பல வித்தைகளை கட்டிய பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான 5 படங்களை பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாது. அதனாலயே பெண்களும் இவருடைய படங்களை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிவார்கள்.

இன்று போய் நாளை வா: 1980-ல் பாக்யராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்று போய் நாளை வா. இந்த படத்தில் பாக்யராஜ் உடன் ராதிகா, பழனி சுவாமி, ரமணி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இளையராஜா இசையில் இன்றளவும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம். வேலையில்லாமல் எதிர்த்த வீட்டு பெண்ணை மூன்று பேர் காதலுக்காக போட்டி போடுவது போன்ற கதையம்சம் கொண்டது. மிகவும் யதார்த்தமான கதைக்களத்தை கொண்ட இந்த படம் குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பும் ரசிகர்களையும் திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்தது.

Also Read: காணாமல் போன 2 நடிகர்கள்.. பாக்யராஜின் சூப்பர் ஹிட் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹீரோக்கள்

தூரல் நின்னு போச்சு: 1982-ல் பாக்யராஜ், எம் என் நம்பியார், சுலக்சனா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது தூரல் நின்னு போச்சு. சுவாரசியமான காதல் கதையம்சம் கொண்ட இந்த படம் அந்தக் காலத்து இளசுகளின் ஃபேவரிட் படங்களின் லிஸ்டில் இருந்தது. இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த 7 நாட்கள்: இதில் பாக்யராஜ் தனது முழு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் பாக்யராஜ் ஜோடியாக அம்பிகா நடித்திருப்பார். பாலக்காடு மாதவனாக பாக்யராஜ் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் காதலியின் கணவரிடம், ‘என்னுடைய காதலி உன்னுடைய மனைவியாகலாம். ஆனால் உன்னுடைய மனைவி என்னுடைய காதலியாக முடியாது’ என பாக்யராஜ் பேசிய பஞ்ச் செம பேமஸானது.

தாவணிக் கனவுகள்: 1984-ல் பாக்யராஜ் இயக்கி, தயாரித்து வெளியிட்ட படம் தாவணிக்கனவுகள். இந்த படத்தில் பாக்யராஜுடன் இணைந்து சிவாஜி கணேசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பாக்யராஜ் உடன் ராதிகா நடித்திருப்பார், ஐந்து தங்கைகளுடன் கஷ்டப்பட்டு வேலை கிடைத்து, காதலில் வெற்றி பெற்று, ஒரு இளைஞன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை மிக தத்ரூபமாக எடுத்திருப்பார். இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: பாக்யராஜ் செய்த மிகப்பெரிய சாதனை.. 40 ஆண்டு காலமாக யாராலும் முறியடிக்கவில்லை

முந்தானை முடிச்சு: 1983-ல் ரொமான்டிக் நிறைந்த காமெடி படமாக வெளிவந்தது முந்தானை முடிச்சு. இந்த படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார். பரிமளா என்ற கதாபாத்திரம் துருதுருவென்று கிராமத்து பெண்ணாக ஊர்வசி பல விருதுகளை தட்டிச் சென்றார். இந்த படம் கிட்டத்தட்ட 30 இலட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் 25 வாரங்களுக்கு மேல் ஓடி சில்வர் ஜூப்ளி படமாக அறிவிக்கப்பட்டது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த இந்த படம் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளதாம்.

இவ்வாறு 80களில் வெளியான படங்கள் அதிகபட்சமாக நான்கு நாட்கள் தான் திரையரங்குகளில் ஓடும். ஆனால் பாக்யராஜின் இந்த 5 படங்கள் குறைந்தது 55 நாட்கள் தியேட்டர் பிதுங்கும் அளவுக்கு ஹவுஸ்புல். அதிலும் அத்தனை பேரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாது என்பதால் இப்போதும் இந்த படங்கள் மவுசு குறையாமல் இருக்கிறது.

Also Read: கடைசிவரை பெயர் தெரியாமல் நடிப்பினாலேயே மனதில் நின்ற நடிகர்.. விடாமல் வாய்ப்பு கொடுத்த பாக்யராஜ்

Continue Reading
To Top