சமுத்திரக்கனி இயக்கி படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்.. ரூட்டை மாற்றி அக்கட தேசம் வரை சென்ற ரகசியம்

சமுத்திரக்கனி ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் மூலம் படங்களில் நடிக்க தொடங்கினார். பின்பு இயக்குனராக அறிமுகமாகி சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து படங்களை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் வெற்றி படமாக அமையாமல் படுதோல்வியை மட்டுமே சந்தித்தது. இப்பொழுது இவர் இயக்குனர் என்ற ரூட்டை மாற்றி முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் நடித்து வருகிறார். அப்படி இவர் இயக்கிய ஐந்து தோல்வி படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

உன்னை சரணடைந்தேன்: சமுத்திரக்கனி இயக்குனராக அறிமுகமாகி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இதில் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி சரண் மற்றும் மீரா வாசுதேவன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் மூலம் வெங்கட் பிரபு ஹீரோவாக அறிமுகமானார். இது நட்புக்கும் காதலுக்கும் இடையான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக வெற்றி கிடைத்தது. ஆனால் வணிக ரீதியாக லாபம் பெறவில்லை.

Also read: யார் NO-1 பிரச்சினை உங்களால தான்.. நீங்க வாயை மூடிட்டா போதும் பயங்கர காட்டத்தில் சமுத்திரக்கனி.!

நெறஞ்ச மனசு: சமுத்திரக்கனி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த் மற்றும் புதுமுக நடிகை சூசன் நடித்திருப்பார்கள். இது கிராமத்தில் நடக்கும் பொதுவான விஷயங்களை சுட்டிக்காட்டும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தோல்வி அடைந்தது.

போராளி: சமுத்திரக்கனி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி, காதல் திரைப்படம் ஆகும். இதில் சசிகுமார், நரேஷ், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருப்பார்கள். ஒரு சாதாரண மனிதன் சமூகத்தை எதிர்த்துப் போராடுவதை எப்படி என்பதை சொல்லும் விதமாக இந்த போராளி திரைப்படம் அமைந்திருக்கும். இந்த படம் வெற்றி படமாக அமையாமல் தோல்வியை சந்தித்தது.

Also read: சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா?. ட்ரெண்டாகும் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

தொண்டன்: 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார். இவருடன் விக்ராந்த், சுனைனா ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரக்கனி பணியாற்றி உயிருக்கு போராடும் நபரை காப்பாற்றுகிறார். இதனால் கோவமான ரவுடிக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையான தகராறுகளை சொல்லும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும். சமூக அக்கறையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வணிக ரீதியாக சராசரி அளவில் மட்டுமே வெற்றி பெற்றது.

நாடோடிகள் 2: 2020 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் மற்றும் அஞ்சலி நடித்திருப்பார்கள். நாடோடிகள் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் இந்த படம் வெற்றி படமாக இல்லாமல் படுதோல்வியை சந்தித்தது.

Also read: அடையாளம் காட்டியதை அடியோடு மறந்து சமுத்திரக்கனி.. ஆல் ரவுண்டராக மாறியாதால் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்