வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சரியான ரூட்டை தேர்வு செய்த அருள்நிதி.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு

அருள்நிதி கலைஞரின் பேரன் என்ற அடைமொழியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாலும் இவரும் கஷ்டப்பட்டு இன்று இவர் பெயரை மக்கள் மனதில் நிலை நிறுத்தி இருக்கிறார். அருள்நிதியும், உதயநிதியும் ஒருசேர தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் இவர்கள் பெயர்களை காப்பாற்ற ஒவ்வொருவரும் தனித்தனி வழிகளை பயன்படுத்தி இன்று தமிழ் சினிமாவில் நற்பெயரை வாங்கியுள்ளனர்.

இதில் அருள்நிதி நடிகருக்கு ஏற்ற அமைப்பு, நடிப்பு எதுவும் இல்லாமல் தனக்கான பாதையை தனியாக சாதித்துக் காட்டியுள்ளார். எதார்த்தமான கதைகள் வெற்றி காண முடியாமல் கிரைம், திரில்லிங் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார் அவர் நடித்த வெற்றிப் படங்களைப் பார்ப்போம்.

வம்சம்-2010:  பாண்டிராஜ் கதையில் உருவான இந்த படத்தில் அருள்நிதி அறிமுகமானார். அருள்நிதியின் தந்தை இந்த திரைப்படத்தை தயாரித்தார். கிராமத்து பின்னணியில் வித்தியாசமான நடிப்பில் இந்த படம் வெற்றி பெற்றது.

மௌனகுரு-2011: சாந்தகுமார் முதல் திரைப்படம் மௌனகுரு. இதில் புத்திசாலித்தனமான சைகோ கேரக்டரில் அசத்தி இருப்பார். இந்த திரைப்படம் எதிர்பாராத ப்ளாக்பஸ்டர் ஹிட் அவருக்கு அளித்தது. இதன் மூலம் இவருக்கான கதை க்ரைம் திரில்லிங் என முடிவு செய்து அடுத்தடுத்த படங்கள் நடித்தார். இவர் இந்த திரைப்படத்தில் நன்றாக நடிக்கத் தெரியும் என்று அனைவருக்கும் புரிய வைத்திருப்பார்.

டிமான்டி காலனி-2015: அருள்நிதியின் சொந்த தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி எதிர்பார்க்காத வெற்றி பெற்ற திரைப்படம். அதிக வசூல் வாரி குவித்தது. முக்கியமாக இந்த படத்தில் இவருக்கு ஜோடிகள் இல்லை ஒரே வீட்டில் நண்பருடன் நடக்கும் திரில்லிங் ஸ்டோரியை மிக அழகாக கொடுத்திருப்பார் இயக்குனர்.

ஆறாது சினம் -2016: இந்த படம் மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடித்திருப்பார்.இது கிரைம் திரில்லிங் கதையம்சத்துடன் படம் வெற்றி பெற்றது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் -2: இந்த திரைப்படமும் கிரைம் திரில்லர் அடிப்படையாக அமைத்து இயக்கி இருப்பார் மாறன். படம் மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் அருள்நிதிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த திரைப்படம்.

K-13-2019: அருள்நிதியின் அடுத்த திரைப்படம் K-13 திரைப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது ஆனால் பெரிய வெற்றி பெறவில்லை காரணம் இதற்கு விளம்பரங்கள் குறைவு அதனால் மக்கள் மத்தியில் சென்ற சென்று சேரவில்லை. அருள்நிதியின் வெற்றி வரிசையில் இந்தப் படமும் இணைந்தது

D-block-2022: இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் அருள்நிதியின் வரிசையில் திரில்லிங் படம். அதற்காகவே இவர் ரசிகர்கள் இந்த படத்தினை ஓரளவு வெற்றி பெற வைத்தனர்.

தேஜாவு-2022: சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படமும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அருள்நிதியின் கிரைம் திரில்லர் கதையில் இந்த படமும் சேர்ந்துள்ளது.

இதுபோல் அருள்நிதி தனக்கான திரைப்படம் இவரிடம் மக்கள் எதிர்பார்க்கும் விஷயம் கிரைம் திரில்லிங் என முடிவு செய்து இவர் வரிசையாக இதே போல் நடித்து அடுத்து டைரி என்ற படம் அதற்கு அடுத்து டிமாண்டி காலனி பாகம் 2 3 4 வரை எடுக்கப் போகிறார்களாம். இவருக்கு இந்த க்ரைம் ஸ்டோரி செட்டாகி வெற்றியும் பெற்றதால் மக்கள் இவரிடம் இதை மட்டுமே எதிர்பார்த்து திரையரங்கில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News