மீண்டும் ஏ ஆர் ரகுமானுடன் இணைய 19 வருடம் எடுத்துக் கொண்ட பிரபல இயக்குனர்.. இவங்க செம கூட்டணி!

இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றதன் மூலம் ஹாலிவுட் நடிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ ஆர் ரகுமானின் ஓட்டம் இன்னும் முடிவடையவில்லை.

சமீபகாலமாக விஜய் ரசிகர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராகவும் ஏ ஆர் ரகுமான் வலம் வருகிறார். விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் என மூன்று படங்களில் தொடர்ந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் மாஸ் படங்களுக்கு இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல். அடுத்ததாக ஏ ஆர் ரகுமான் இசையில் அயலான், பொண்ணியின் செல்வன் போன்ற படங்கள் வரிசையில் உள்ளன.

அதனைத் தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காதல் படங்களை எடுப்பதில் நல்லவரான இயக்குனர் கதிர் என்பவருடன் ஏ ஆர் ரகுமான் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஏ ஆர் ரகுமான் மற்றும் கதிர் கூட்டணியில் வெளியான காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களின் பாடல்களில் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அன்றைய கால இளம் ரசிகர்கள் முதல் இன்றைய கால இளம் ரசிகர்கள் வரை அனைவரும் ரசித்துக் கேட்க கூடிய அளவிற்கு பாடல்கள் இடம் பெற்றது.

அந்த வகையில் அடுத்ததாக பல நாட்களுக்கு பிறகு மீண்டும் காதல் கதையை கையில் எடுத்திருக்கும் கதிர் படத்தில் ஏ ஆர் ரகுமான் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் நாயகனாக புதுமுகம் ஹீரோ கிஷோர் நடிக்க ஆர்கே இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ar-rahman-kathir-cinemapettai
ar-rahman-kathir-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்