fbpx
Connect with us

Cinemapettai

கதி கலக்கும் அனுஷ்காவின் அதிரடி புகைப்படம்! ஒரே நாளில் லட்சக்கணக்கில் வியூஸ் படைத்து சாதனை.

News | செய்திகள்

கதி கலக்கும் அனுஷ்காவின் அதிரடி புகைப்படம்! ஒரே நாளில் லட்சக்கணக்கில் வியூஸ் படைத்து சாதனை.

நடிகை அனுஷ்கா அருந்ததி படத்திற்கு பிறகு தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அருந்ததி முதல் அனுஷ்காவிற்கு அடிமையான ரசிகர் கூட்டம் தொடர்ந்து வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், சிங்கம், என்னை அறிந்தால், லிங்கா, ருத்ரம்மா தேவி, பாஹுபலி என அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பாகுபலி முதல் பாகத்திற்கு பிறகு இஞ்சி இடுப்பழகி படத்திற்காக இதுவரை எந்த கதாநாயகியும் செய்யாத முயற்சியான உடல் பருமனை கூட்டுதலை செய்தார் அனுஷ்கா. இதனால் தனது உடல் எடையை 20 கிலோ வரை அதிகரித்தார் அனுஷ்கா.

ஆனால் கூட்டிய எடையை அதன் பிறகு குறைக்க படாத பாடு பட்டும் முடியவில்லை. இருப்பினும் பாஹுபலி இரண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் உதவியோடு இவரது உடலை ஆங்காங்கு குறைந்தது போன்று காட்டினர்.

உடல் எடையால் தனது பட வாய்ப்பும் மதிப்பும் குறைவது கண்டு வெகுண்டெழுந்த அனுஷ்கா வழக்கம் போல் யோகா, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று அனைத்தையும் முழு அர்பணிப்போடு செய்து தற்போது உடல் மெலிந்துள்ளார்.

anushka latest

anushka latest

இதெல்லாம் அவசர அவசரமாக ஏன் செய்தார் என்றால் அவரின் அடுத்த படமான பாக்மதிக்காகத்தான்.G. அசோக் அவர்கள் இயக்கத்தில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் பாக்மதி. இந்த படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து மிருகம் ஆதி, ஜெயராம், ஆஷா சரத் போன்றோர் நடித்து வருகின்றனர். படத்தின் இசை s.தமன்.

U.V creations புரொடக்சனில் வம்சி ரெட்டி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் மூவி. படத்தின் வெளியீடு அடுத்தவருடம் ஜனவரி மாதம் 12ம் நாள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் first லுக் அனுஷ்காவின் பிறந்த நாளான நாளை வெளியிடுவதாக இருந்தது, ஆனால் திடீரென்று இன்றே இதன் first லுக் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

இந்த first லுக்கில் அனுஷ்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவசேனா போன்று சுவரில் கை கால்கள் விலங்கால் பூட்டப்பட்ட ஒரு பெண்ணின் ஓவியம் உள்ளது, அதே போல் அனுஷ்காவின் இடது கை சுவற்றில் ஆணிவைத்து அறையப்படுள்ளது. அனுஷ்காவின் வலது கையில் ஆணி அறைந்த சுத்தியல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை வைத்து பார்க்கையில் இப்படம் The Silence of the Lambs போன்ற திகில் படமாக இருக்கக் கூடும் என்ற கருத்து பரவி வருகிறது. மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், முக நூல் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் அனுஷ்காவின் இந்த படம் தற்போது வைரலாக பரவி வெளியான சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான வியூஸ் பெற்று சாதனை படைத்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top