Tamil Cinema News | சினிமா செய்திகள்
அண்ணாச்சி தில்லா குறைத்த 30 வயது.. உல்டா பண்ணிய மாஸ் ஹீரோவின் கெட்டப்பை கண்டுபிடிச்சாச்சு
மாஸ் ஹீரோவின் கெட்டப்பை அப்படியே அட்டகாப்பி அடித்திருக்கும் லெஜெண்ட் சரவணன்.
தொழிலதிபரான அண்ணாச்சி சரவணன் அருள் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் முதலில் தன் கடையின் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு பலரையும் வாயடைக்க செய்தார்.
அதன் பிறகு சினிமாவிலும் அதுவும் ஹீரோவாக தி லெஜண்ட் என்ற பான் இந்தியா படத்தில் நடித்து ரிலீஸ் செய்தார். இந்த படம் சமீபத்தில் ஹாட் ஸ்டாரிலும் ரிலீஸ் ஆனது. 50 வயதில் இதெல்லாம் தேவையா! என ரசிகர்கள் கேட்கின்ற அளவுக்கு, இப்போது 30 வயது குறைந்து தில்லா இருக்கும் போட்டோ ஷூட்டை சரவணன் அண்ணாச்சி நடத்தினார்.
Also Read: OTT-யில் விலை போகாமல் காத்திருக்கும் 4 படங்கள்.. எவ்வளவு அடி விழுந்தாலும் அசராத அண்ணாச்சி
ஆரஞ்சு மற்றும் பிளாக் நிற கோட் சூட்டில் தாடியுடன் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இவருடைய சமீபத்திய புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனனின் ‘அலவைகுண்டபுரம்’ படத்தில், அவர் இருக்கும் கெட்டப்பை அப்படியே லெஜெண்ட் சரவணன் அட்டகாப்பியடித்திருப்பதை எப்படியோ கண்டுபிடித்து விட்டனர்.

allu-arjun-cinemapettai
ஏற்கனவே தி லெஜண்ட் படத்தில் ரோபோ போலவே நடித்து பலரது கேலி கிண்டலுக்கு ஆளான சரவணன் அண்ணாச்சி, பணம் இருக்கும் பகுமானத்தில் ஓவர் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார். அதிலும் அல்லு அர்ஜுனுக்கு நிகராக போட்டோ ஷூட் நடத்தி ஓவர் அலப்பறை காட்டிக் கொண்டிருக்கிறார்.

legend-saravanan-cinemapettai
மேலும் அண்ணாச்சி சரவணன் அருள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு, அடுத்த படத்திற்கான நியூ கெட்டப் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த இவர், லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து லியோ படக்குழுவினரும்
எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் நியூ லுக்குடன் ‘விரைவில் அடுத்த பட அறிவிப்பு’ என பதிவிட்டுள்ளார்.

legend-saravanan-1-cinemapettai
