வெறும் 35 கிலோ வைத்துக்கொண்டு இது தேவையா.? கபூர் குடும்பத்தையே மிரள விட்ட அனிருத்

தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத் அடுத்து பாலிவுட்டை டார்கெட் செய்து இருக்கிறார். இங்கே இருந்தால் வளர விட மாட்டார்கள், குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும் என்று யோசித்த அனிருத் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

வேறு இடத்திற்கு சென்றால் தான் தன்னுடைய திறமையை காண்பித்து முன்னேற முடியும் என்று அவர் தற்போது பல புதுப்புது உத்திகளை கையாண்டு வருகிறார். இதேபோன்றுதான் தமிழில் பிரபல இசையமைப்பாளராக இருந்த ஏஆர் ரகுமான் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறார்.

அதிலும் ஹிந்தியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அனிருத்தும் தற்போது பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளதாக தெரிகிறது. இப்போது மும்பை சென்றிருக்கும் அவர் அங்கே ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

அங்கே வரும் புரோக்கர்களை வளைத்துப் போடும் விதமாக அனிருத் பல செயல்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அனிருத் அங்கேயும் 3, 4 பவுன்சர்கள் படைசூழ சுற்றி வருகிறாராம்.

இங்குதான் சிறிய அளவில் பிரபலமாகி விட்டாலே அந்த பிரபலங்கள் பாடிகார்ட் வைத்துக் கொண்டு சுற்றி வருவார்கள். ஆனால் இவரோ இங்கு காட்டிய பந்தாவை பாலிவுட்டிலும் காட்டிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றிதான் தற்போது பலரும் கலாய்த்து பேசி வருகின்றனர். அது மட்டுமின்றி கபூர் குடும்பமே பாடிகார்ட் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறது என்று அனிருத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஏன்பா பாலிவுட் ஹீரோக்களே இந்த மாதிரி பவுன்சர்கள் வைத்தது கிடையாது. நீ இருக்கிறதோ 35 கிலோ தான், உனக்கு ஏன் இந்த வேலை என்று கிண்டலடித்து வருகின்றனர். சொந்த காசை செலவு பண்ணி இப்படி ஒரு பப்ளிசிட்டி தேவையா என்று திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -