அனிருத்திற்காக உடல் எடையை குறைத்த புதிய காதலி.. நைட் பார்ட்டியால் வந்த சங்கடம்

அனிருத் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களும் இவர் தான் இசையமைக்க வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு தன் திறமையால் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கும் இளம் நாயகிக்கும் காதல் இருப்பதாக ஒரு தகவல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கி வந்த அனிருத் தற்போது தான் அதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இசையில் கவனத்தைச் செலுத்திவந்தார்.

இந்நிலையில் அவர் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற ஒரு தகவல் பரபரப்பை கிளப்பியது. அதற்கு ஏற்றார் போல் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் போட்டோக்களும் வெளிவந்தது.

மேலும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்தது கூட அனிருத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதற்கு தானாம். ஆனால் இதைப் பற்றி கேட்டால் இருவரும் எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் படு நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் தற்போது மீண்டும் இவர்களைப் பற்றிய பேச்சு கிளம்பி இருக்கிறது. இந்த தகவலால் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரின் குடும்பத்தினரும் பெரும் சங்கடத்தில் இருக்கின்றனர்.

ஏனென்றால் தற்போது அனிருத்திற்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். திருமணமும் கைக்கூடி வரும் நிலையில் இப்படி வெளிவந்த செய்தி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இந்த சமயத்தில் இது போன்ற செய்திகள் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும் என்ற கவலை அவருடைய அம்மாவுக்கு இருக்கிறதாம். இப்படி இரு குடும்பத்தினரும் ஆளுக்கு ஒரு யோசனையில் இருக்க சம்பந்தப்பட்ட அந்த இருவர் மட்டும் தங்கள் போக்கில் ஜாலியாக இருக்கின்றனர்.

Next Story

- Advertisement -