பீஸ்ட் படத்தில் கில்லி பட பாடல்.. அதுவும் இந்த பாடலைதான் ரீமிக்ஸ் செய்து கலக்க போகிறார்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜயின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருப்பது மட்டுமல்லாமல் திரையரங்கில் தாறுமாறாக தங்களுடைய ஆதரவை தருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 135 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம், 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் பெற்ற வசூல் சாதனை புரிந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் படத்தைக் குறித்து ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். எனவே படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து டப்பிங் வேலையை மும்முரமாக துவங்க பட்டிருக்கும் பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணியும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மேலும் இந்தப் படத்திற்கும் அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான கில்லி படத்தின் கபடி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதேபோன்று தளபதியின் அடுத்த படமான பீஸ்ட்-டிலும் கில்லி படத்திலிருக்கும் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்.

இதேபோன்று அனிருத் இசையமைத்த பேட்ட படத்திலும் ரஜினி நடித்த படத்தின் ‘ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்தார். தற்போது பீஸ்ட் படத்திலும் கில்லி படத்தில் இடம்பெற்றுள்ள ‘அர்ஜுனன் வில்லு’ என்ற பாடல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு அனிருத் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த நடிகரின் முந்தைய படங்களின் பாடல்களை ரீமேக் செய்வதை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்.

இவ்வாறு  அனிருத் இசையமைக்கும் படங்களில் ஒரே பார்முலாவை அடுத்தடுத்த படங்களில் பின்பற்றி கொண்டிருக்கிறார். மேலும் துப்பாக்கி படத்திற்கு பின் தளபதி விஜய் ராணுவ வீரராக நடிக்கும் பீஸ்ட் படத்திலும் விஜய்யின் கதாபாத்திரம் ராணுவத்தின் சீக்ரெட் ஏஜென்ட் ஆக உருவாக்கி இருப்பதால் நிச்சயம் படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்க விடப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அத்துடன் பீஸ்ட் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார் இதுவரை காமெடி படங்களை எடுத்து விட்டு, தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் படத்தில் களமிறங்கியது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இரட்டிப்பாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்