Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-rajini-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பினாமியை வைத்து சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் தந்திரம்.. விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ்

இந்நிலையில் விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் பற்றிய விஷயம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே விஜய் பற்றி பல செய்திகள் வெளிவந்து பகீர் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க அவர் மறைமுகமாக பிளான் போட்டு வருவதைப் பற்றி பல மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் பற்றிய விஷயம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அவர் தனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நபர்களை பினாமியாக வைத்து தன்னுடைய படத்தை தயாரித்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் தளபதி 67 திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.

Also read: தளபதி வாரிசுன்னா சும்மாவா.. நடிப்பை ஓரம் கட்டி சஞ்சய் எடுத்துள்ள புது அவதாரம்

மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பவர்தான் ஜெகதீஷ். இவர் வேறு யாரும் அல்ல விஜய்க்கு பல காலமாகவே மேனேஜராக இருந்து அனைத்து வேலைகளையும் கவனித்து வருபவர் தான். அது மட்டுமல்லாமல் விஜய் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் இவருக்கு அதிக உரிமை இருப்பதும் அனைவருக்கும் தெரியும். இப்போது இவரை பினாமியாக வைத்து தான் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் முதலீடு செய்து இருக்கிறார்.

இதன் மூலம் அவர் இரட்டிப்பு லாபம் பார்க்கவும் திட்டமிட்டுள்ளாராம். இப்படி அண்டர் கிரவுண்ட் பிசினஸ் செய்து வரும் விஜய் இதற்கு முன்னதாக சில திரைப்படங்களுக்காகவும் சொந்த காசை செலவு செய்திருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புலி திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த பி.டி செல்வகுமார் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மூலம்தான் அப்படத்திற்காக விஜய் பல கோடி செலவு செய்திருந்தார்.

Also read: லோகேஷ், தளபதி கூட்டணியை பார்த்து பயந்த 3 ஹீரோக்கள்.. இயக்குனர்களை கழட்டிவிட்ட பரிதாபம்

அதேபோன்று கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அதில் லலித் குமாருடன் இணைந்து ஜெகதீஷ், சேவியர் பிரிட்டோ ஆகியோரும் படத்தை தயாரித்திருந்தனர். இந்த சேவியர் பிரிட்டோவும் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் ஒருவராக இருப்பவர். இப்படி விஜய் பினாமிகளை வைத்து சரியாக காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதன் மூலம் தனக்கான சம்பளம் ஒரு பக்கம் வசூல் லாபத்தில் குறிப்பிட்ட பங்கு ஒரு பக்கம் என நன்றாக கல்லாகட்டியும் வருகிறார். அவருடைய இந்த பிசினஸ் தந்திரத்தை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் இப்படி ஒரு பிளான் மூலம் சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் அளவுக்கு விஜய் சைலண்டாக வேலை பார்த்து வருவதாகவும் சலசலக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தளபதி 67க்காக விஜய் போட்டுள்ள பிளான் நிச்சயம் அவருக்கு லாபத்தை தான் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: வாரிசு, துணிவை விட இவங்க சண்டை பெரும் சண்டையா இருக்கு.. எதிர்பார்ப்பை எகிற விட்ட தனுஷ்

Continue Reading
To Top