நயன்தாராவுக்கு வில்லனாகும் மினிமம் கேரண்டி ஹீரோ.. விஜய் சேதுபதி மாதிரி ரிஸ்க் எடுக்க ஆசையாம்!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் நடிக்க நடிகர்கள் ரெடியாக இருக்கின்றனர். அதற்கு அச்சாரம் போட்டவர்கள் என்று பார்த்தால் அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை சொல்லலாம்.

அருண் விஜய் தனக்கு மார்கெட் இல்லாத சமயத்தில் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தன்னுடைய ஹீரோ மார்க்கெட்டை மீட்டெடுத்தார்.

அதேபோல் விஜய் சேதுபதி தற்போது சென்சேஷனல் ஹீரோவாக வலம் வந்தாலும் இடையில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து விடுகிறார். சொல்லப்போனால் ஹீரோவாக அவரை கொண்டாடியதைவிட வில்லனாக அவரை கொண்டாடியது தான் அதிகம்.

அந்த ரூட்டை நாமும் பாலோ பண்ணுவோம் என மினிமம் கேரன்டி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் விதார்த், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுதான் இன்றைய கோலிவுட் ஹாட் டாபிக்.

நயன்தாரா சோலோ ஹீரோயின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வடிவேலுவின் எலி படத்தை எடுத்த யுவராஜ் தயாளன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக வித்தார் ஒப்பந்தமாகியுள்ளார். விதார்த் ஏற்கனவே ஹீரோவாக 4 படங்கள் கையில் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஏன் இப்படி என்று கேட்டால் ஒருவேளை வில்லனாக நடித்து அந்தப் படம் வெற்றியடைந்து விட்டால் ஒரே நேரத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என விஜய் சேதுபதி போல் மாறி மாறி நடிக்க வேண்டியதுதான் என்கிறாராம். பிழைக்கத் தெரிந்த ஆள்!

vidharth-cinemapettai
vidharth-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்