குடியால் வாழ்க்கையை இழந்த நடிகர்கள்.. அடக் கொடுமையே, இந்த எதார்த்த நடிகருமா?

தமிழ் சினிமாவில் குடியால் வாழ்க்கையை இழந்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள பல நடிகர்களும் தங்களுடைய மார்க்கெட்டை இழந்து தடம் தெரியாமல் போனதற்கும் குடிதான் காரணமாம்.

மோகன்: கமலுக்கு பிறகு காதல் நாயகனாக வலம் வந்த மோகன் மீது தீராத காதல் கொண்ட நடிகை ஒருவர் அவர் கிடைக்காத காரணத்தினால் அவருக்கு எயிட்ஸ் என்று ஒரு புரளியை கிளப்ப, பின்னாளில் அதுவே அவரது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்துவிட்டது. அதன்பிறகு குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டாராம்.

ராமராஜன்: ரஜினி, கமலுக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த ராமராஜன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சொந்தப் பிரச்சினைகள் காரணமாக பின்னாளில் குடிக்கு அடிமையாகி இழந்த மார்க்கெட்டை இழந்து விட்டாராம்.

கார்த்தி: நவரச நாயகன் கார்த்திக் தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக வலம் வந்தவர். இவரைப் பார்த்து ஏங்காத வயது பெண்களே கிடையாது. அந்தளவு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல கிரேஸ் உள்ள நடிகராக வலம் வந்தவர் பின்னாளில் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும், அதன் காரணமாக படப்பிடிப்புகள் சரிவர வராமல் தயாரிப்பாளர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதாகும் ஒரு செய்தியுள்ளது.

ஜெய்: பார்ப்பதற்கு தளபதி விஜய் மாதிரியே இருக்கிறார் என ஆரம்பத்திலேயே ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கர்வம் காரணமாக தயாரிப்பாளர்களை மதிக்காமல் சுற்றித் திரிந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குடிக்கு அடிமையாகி படப்பிடிப்பு தளத்தில் ரவுசு செய்வதால் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகின்றனர்.

விமல்: எந்த ஊரு சினிமா பின்புலமும் இல்லாமல் மினிமம் கேரண்டி நடிகர் அந்தஸ்துக்குக்கு உயர்ந்தவர் விமல். ஆனால் சமீபகாலமாக இவருக்கு அவரது மார்க்கெட் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் குடிக்கு அடிமையாகி விட்டாராம். இந்த தகவல்களை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்