
இந்த வயதிலும் பார்ப்பதற்கு பள்ளி மாணவன் போல் மிகவும் இளமையாக இருக்கும் ஒரே ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். இவரின் ஒல்லியான உடல் தோற்றம் தான் இவருக்கு மிகப்பெரிய வரம் என்று கூறவேண்டும். சாதாரணமாக தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கிய தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரது நடிப்பு கோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று புகழ் பேசியுள்ளது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள அட்ராங்கி ரே என்ற படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் நாம் பார்க்க போகிறோம். கதைப்படி சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாமல் நாயகன் தனுஷும், நாயகி சாரா அலிகானும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பின்னர் ஒருக்கட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர்.

ஆனால் இவர்கள் மனதளவில் சேரும் நேரத்தில் ஒரு பெரிய பிரச்சனை குறுக்கே வருகிறது. அது என்ன பிரச்சனை? இறுதியாக இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே அட்ராங்கி ரே படத்தின் கதை.
இந்த படத்தில் சில காட்சிகளில் தனுஷின் நடிப்பைப் பார்த்து அக்ஷய் குமாரே மிரன்டுள்ளார். நல்ல டெடிகேஷன் உள்ள ஆர்டிஸ்ட் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார்
தனுஷின் நடிப்பு எப்படி இருக்கும் என தமிழ் ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவரின் நடிப்பு திறமையை கர்ணன் அசுரன் போன்ற பல படங்களில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆனந்த் L ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திலும் அவர் நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார்.

தனுஷ் மட்டுமல்ல அக்ஷய் குமார், சாரா அலி கான் அனைவருமே அவர்களுக்கான பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். ஒரு சில குறைகளை மட்டும் தவிர்த்து விட்டு பார்த்தால் மொத்தத்தில் ஒரு கலர்புல்லான ஒரு கலாட்டா எண்டர்டெயின்மென்ட் படம் தான் அட்ராங்கி ரே. நிச்சயம் படம் உங்களை மகிழ்விக்கும்.
படத்தை பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் படத்தை பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதேபோல் தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் உட்பட பல பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர்.