fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்பு ரெக்கார்டை கூட தொடமுடியாத வலிமை.. பெரும் சோகத்தில் AK ஃபேன்ஸ்

valimai simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு ரெக்கார்டை கூட தொடமுடியாத வலிமை.. பெரும் சோகத்தில் AK ஃபேன்ஸ்

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் திரைப்படம் வலிமை. இந்த படம் வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வலிமை படம் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை அதனுடைய பயணத்தை விளக்குமாறு அமைந்துள்ளது. படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த வீடியோ ஆரம்பிக்கிறது.

அதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் சண்டை காட்சிகள் மற்றும் பிரமாண்ட செட்கள் என்று இந்த படம் உருவான விதம் மிகவும் அற்புதமாக காட்டப்பட்டது. கொரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு அதனால் முடங்கிய சினிமா துறை போன்ற இக்கட்டான நிலைமையில் வலிமை படக்குழு இருந்துள்ளது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் வலிமை திரைப்படம் மீண்டும் புது வேகத்துடன் தொடங்கப்பட்டது. இந்த மேக்கிங் வீடியோவில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அஜித் பைக் வீலிங் செய்யும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் வண்டியிலிருந்து கீழே விழுந்தார்.

அதை படக்குழு உட்பட அவரது ரசிகர்கள் யாரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கீழே விழுந்தாலும் மீண்டும் எழுவோம் என்பதுபோல அஜித் மறுபடியும் அந்த காட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்தின் அர்ப்பணிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.

இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இரண்டு நாளாகியும் 5 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே கடந்துள்ளது. கடந்த மாதம் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் ஆதரவால் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியான முதல் நாள் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.

வலிமை பட அப்டேட்களை கேட்டு அஜித்தின் ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்தார்கள். அப்போது அஜித் சம்பந்தப்பட்ட போட்டோ வெளியானால் அது மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகும். ஆனால் இந்த மேக்கிங் வீடியோ குறைவான பார்வையாளர்களைக் கடந்துள்ளது ஏன் என்று படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

ஒருவேளை அஜித்தின் ரசிகர்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்களா அல்லது இந்த வீடியோ அவர்களை கவரவில்லையா, படக்குழு இதை சரியாக விளம்பரப்படுத்த வில்லையா என்று பலரும் வியப்பில் இருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top