வலிமை பட இசையமைப்பாளர் யுவன் இல்லையா? மிரட்டலாக வந்து BGM-க்கு இவர் தான் காரணம்

ajith-yuvan-shankar-raja
ajith-yuvan-shankar-raja

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். இவரின் பாடல்கள் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக உள்ளது. பலர் அவர்களின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் யுவனின் பாடல்கள் மிகவும் எதார்த்தமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

எனவே யுவன் இசையமைக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு யுவன் இசையமைத்திருப்பதாக கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் தற்போது வலிமை படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யுவன் அல்ல வேறு ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வலிமை படம்
பொங்கலையொட்டி வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கிட்டத்தட்ட இப்போதே படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் பின்னணி இசை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு மட்டும் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளாராம்.

மற்றபடி படத்தின் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசை முழுவதும் ஜிப்ரான் தான் இசையமைத்ததாக கூறப்படுகிறது. ஜிப்ரான் ஏற்கனவே இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வலிமை படத்தில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை பின்னணி இசை அமைக்க வைத்த காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். எது எப்படியோ ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் போதும்.

Advertisement Amazon Prime Banner