அஜித் பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த சுதா கொங்கரா தற்போது அதை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது என வேறு ஒரு நடிகருடன் கூட்டணி சேர உள்ளதாக வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய யூடியுப் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
அஜித் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அஜித்தின் கேரியரில் அதிக நாள் சூட்டிங் செய்யப்பட்ட படமாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு இயற்கை காரணங்களில் சிக்கி சின்னாபின்னமானது வலிமை படம்.
இருந்தாலும் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் முடிந்தவரை படத்தின் மொத்த காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டார். ஆனால் வெளிநாட்டில் ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது வலிமை.
இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் வினோத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் தல அஜித். முன்னதாக சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு சுதா கொங்கராவை அழைத்து அவரிடம் கதை கேட்டு ஓகே செய்து விட்டாராம்.
ஆனால் தற்போது வினோத் படத்திற்கு பிறகுதான் சுதா கொங்கராவின் படம் வரும் என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தற்போது அஜித்தை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது என தன்னுடைய கதையை வேறு ஒருவரிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம்.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம பாகுபலி பிரபாஸ் தான். சுதா கொங்கரா சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் செய்திகள் வந்துள்ளன. தற்போது பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார் போன்ற படங்கள் வரிசையாக ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
