ஒரு வழியா ரிலீஸ் தேதியை உறுதி செய்த வலிமை படக்குழு.. குதூகலத்தில் ரசிகர்கள்.!

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப்படம் ஆயுத பூஜைக்கு அதாவது அக்டோபர் மாதம் திரையில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. மற்றொருபுறம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

கடந்த ஓராண்டாக அப்டேட் ஏதும் வராமல் இருந்தநிலையில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வலிமை அப்டேட் வெளியாக்கிக் கொண்டிருக்கிறது. பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியான சில நாட்களிலே ‘நாங்க வேற மாதிரி’ என்ற பாடல், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடல் தற்போது யூடியூப்பில் 20 மில்லியன் பார்வையைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. தற்போது, புதிய தகவலாக இப்படம் ஆயுத பூஜைக்கு, அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. விஜயதசமி, ஆயுத பூஜை அக்டோபர் 14, 15ல் வருகிறது.

அந்த இரு தினங்களும் சனி மற்றும் ஞாயிறு என்பதால், விடுமுறை நாட்களில் தியேட்டருக்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் அன்றைய தினம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதால், அக்டோபரில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

valimai-cinemapettai
valimai-cinemapettai

படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிட வேண்டும் என அஜித் கண்டிஷன் போட்டதால் படத்தின் அனைத்து வேலைகளையும் இன்னும் 50 நாட்களில் முடித்தால் ஆயுத பூஜைக்கு வலிமையை திரையில் காணலாம். மற்றொரு பெரிய நடிகரான ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வரவிருப்பதால் வலிமை அக்டோபரில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்