ட்ரெண்டான தல அஜித் வெளியிட்ட அறிக்கை.. வாழு, வாழவிடு!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் அமராவதி படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் இப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் நடிகர் அஜித் திரைத்துறையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இதனை முன்னிட்டு அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ரசிகர்கள், வெறுப்பவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள்.

ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு; வாழவிடு! நிபந்தனையற்ற அன்புடன் அஜித்குமார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி வெறுப்பாளர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்திடம் இருந்து திடீரென இப்படி ஒரு அறிக்கை வெளியானது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ajith-kumar

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நீண்ட நாள் கழித்து ஓப்பனாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் #WeLoveYouTHALA என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்