இரண்டு வருட பாரத்தை இறக்கி வைத்த தல அஜித்.. இப்பதான் நிம்மதியா இருக்கிறாராம்!

அஜித் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வினோத் இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

மேலும் போனிகபூர் நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு அஜித்தின் வலிமை படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அஜித் பான் இந்தியா நடிகராக உருவெடுக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான நாங்க வேற மாதிரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் போன்றவையும் செம ஹிட்.

90 சதவீத படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வெளிநாடுகளில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் மாட்டி தவித்தது வலிமை படக்குழு. ஆனால் சமீபத்தில் அதற்கு வாய்ப்பு கிடைத்து ரஷ்யா சென்று மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டார்களாம்.

கிட்டத்தட்ட இரண்டு வருடகாலமாக இழுத்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஒருவழியாக மொத்தமாக முடிவடைந்ததை அடுத்து அஜித் பெரும் நிம்மதியில் இருக்கிறார். இந்த இரண்டு வருடங்களில் சரியாக படப்பிடிப்புகள் நடக்காது, படப்பிடிப்பின்போது அஜித்துக்கு அடிபட்டது என மனுசன் கொஞ்சம் ஆடிப் போய்விட்டாராம்.

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் வினோத் ஆகியோர் கூட்டணியில் தல அஜித் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் படமாக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் தல அஜித்.

valimai-cinemapettai
valimai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்