செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

மலையாள சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. 10 பொருத்தமும் பக்காவான ஃபர்ஸ்ட் லுக்

கோலிவுட்டை பொருத்தவரை நடிகைகள் அனைவரும் ஹீரோக்களுக்கு இணையாக சோலோ நாயகி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாராவை தொடர்ந்து பல நடிகைகள் சோலோ நாயகி சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, கனா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி ஜியோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தி கிரேட் இந்தியன் கிச்சன்.

ஆணாதிக்க சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி இருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் அதே பெயரில் தமிழில் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, துர்கா ராம் செளத்ரி மற்றும் நீல் செளத்ரி ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முந்தைய படங்களை போலவே இந்த படமும் அவருக்கு நிச்சயம் நல்ல பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும்பாலான ரீமேக் படங்கள் அந்த அளவிற்கு வெற்றி பெறுவதில்லை. உதாரணமாக அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படுதோல்வியை சந்தித்தது. ஆனால் பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கான ஓ மணப்பெண்ணே படம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த வரிசையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

the-great-indian-kitchen-aishwarya-rajesh
the-great-indian-kitchen-aishwarya-rajesh
Advertisement Amazon Prime Banner

Trending News