புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஏஜென்ட் டீனாவுக்கு அழைப்பு விடுத்த சூப்பர் ஸ்டார்.. வெறித்தனமாக உருவாகும் புதிய கூட்டணி

விக்ரம் படத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் இவர்களைத் தாண்டி பேசப்பட்ட கதாபாத்திரம் ஏஜென்ட் டீனா. இவர் ஆரம்பத்தில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களில் குரூப் டான்ஸராக நடனமாடி உள்ளார்.

மேலும் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் போன்றவர்களுடன் பணியாற்றிய வந்துள்ளார். அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தினேஷ் மாஸ்டருடன் பணியாற்றியுள்ளார். விக்ரம் படத்தில் இயக்குனர் லோக்கேஷின் வற்புறுத்தலால் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் கமலஹாசனை பார்த்தவுடன் தனக்கு நடிப்பே வரவில்லை என பல பேட்டிகளில் வசந்தி கூறியுள்ளார். அதன் பின்பு லோகேஷ் நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்ததாக கூறியிருந்தார். விக்ரம் படத்தில் வேலைக்காரி வள்ளியம்மாவாக இருந்து ஏஜென்ட் டீனாவாக மாறும் காட்சிகள் பிரமாதமாக அமைந்திருந்தது.

மேலும் சண்டை காட்சிகளிலும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து வசந்திக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். இந்நிலையில் மலையாள படம் ஒன்றில் தற்போது வசந்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாளப் படத்தில் வசந்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் மம்முட்டியுடன் ஏஜென்ட் டீனா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

மேலும் விக்ரம் படத்தை போல இந்தப் படத்திலும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. ஒரு டான்ஸராக திரைத் துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தற்போது நடிகையாக வசந்திக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

- Advertisement -

Trending News