Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

17 வருடம் கழித்து நேருக்கு நேராக மோதும் ரஜினி, கமல்.. அனல் பறக்கும் அப்டேட்!

rajinikanth kamal haasan

பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி-கமல் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக வாய்ப்பிருக்கிறது. அப்படி ரிலீசானால் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு ரஜினி-கமல் படம் ஒன்றாக ரிலீஸ் ஆகும். மேலும் இது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

கமலின் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிவிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாகி, 2018 ஆம் ஆண்டில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்தது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு இடத்தில் நடந்த விபத்து, கொரோனா லாக்டவுன் என இந்தியன் ஷூட்டிங் தடைபட்டுவிட்டது.

Also Read: ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த மாஸ் ஹீரோ.. கடைசிவரை பண்ணாத நெகட்டிவ் கேரக்டர்

நெல்சன்-விஜய் கூட்டணியில் பீஸ்ட் திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே ரஜினி-நெல்சன் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பீஸ்ட் படத்தின் ரிலீசிற்கு பின் ரஜினி-நெல்சன்-அனிருத் கூட்டணியில் ரஜினியின் 169 வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ரஜினி படத்தின் ஷூட்டிங் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. தற்போது நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் வரும் 24 ஆம் தேதி தான் தொடங்குகிறது.

Also Read: கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் வேண்டாம்.. ரஜினியை போல தேடி வந்த வாய்ப்பை மறுத்த சிம்பு

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில் தொடங்குவதால், ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 2005 ஆம் ஆண்டு ரஜினியின் சந்திரமுகியும், கமலஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸும் ஒன்றாக வெளியானது.

ரஜினிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை எனவே ஜெய்லரின் வெற்றி ரஜினிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கமலுக்கு ‘விக்ரம்’ வெற்றிக்கு பிறகு வெளியாகும் திரைப்படத்திற்கு பிறகு வெளியாக உள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’, ‘விக்ரம்’ வெற்றியை தக்கவைத்து கொள்ளும் பொறுப்பு கமலுக்கு அதிகமாகவே உள்ளது.

Also Read: தொடர்ந்து வரும் சிக்கலால் குழப்பத்தில் இருக்கும் கமல்.. வழி கிடைக்காமல் திண்டாடும் இந்தியன் 2

Continue Reading
To Top