புலி படம் போனா என்ன? ஆறு நடிகர்கள், ஆறு கதைகள் என கலக்கும் சிம்பு தேவன்

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் திறமையானவர் என பெயர் எடுத்தவர் சிம்புதேவன். இவரது ஒவ்வொரு படங்களுமே மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பதால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஆனால் கடைசியாக சிம்புதேவன் இயக்கிய புலி திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற படமாக எடுத்ததால் இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரவில்லை என்ற கருத்துக்கள் அதிகமாக வந்தன.

அதுக்கப்புறம் சில வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் தவித்தவர் மீண்டும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படமான இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24am புலிகேசி என்ற படத்தை தொடங்கினார். ஆனால் வடிவேலு செய்த குளறுபடியால் அந்தப்படமும் பாதியில் நின்றது.

அதற்கடுத்தபடியாக ஆறு கதைகள். ஆறு நடிகர்கள், ஆறு இசையமைப்பாளர்கள் என கசடதபற என்ற படத்தை இயக்கினார். படம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் ரிலீஸான பாடில்லை.

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், பிரேம்ஜி, வெங்கட் பிரபு, சாந்தனு, ரெஜினா என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் இணைந்து தயாரித்தனர்.

நீண்ட நாட்களாக ரிலீஸ் இழுபறியில் இருந்து வந்த இந்த படம் தற்போது நேரடியாக ஒன்று இணையதளத்தில் வெளியாக உள்ளதாம். இன்னும் எந்த ஓடிடி என்பது முடிவாகவில்லை. அனேகமாக புதிதாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் சோனி நிறுவனமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

kasada-thapara-cinemapettai
kasada-thapara-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்