21 வருடம் கழித்து விட்டதை பிடிக்க களம் இறங்கிய கே எஸ் ரவிக்குமார்.. ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனர்களின் ஒருவர்தான் கேஎஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர்களின் கனவாக இருந்து வருகிறது. அதேபோல் அந்த காலத்தில் ரஜினி, கமல், அர்ஜுன், சரத்குமார் போன்ற நடிகர்களை தூக்கிவிட்டதே கேஎஸ் ரவிக்குமாரின் படங்கள் தான்.

அதுமட்டுமில்லாமல் கேஎஸ் ரவிக்குமார் தற்போது பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை வைத்து ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இதற்கான பூஜை நேற்று நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறது. அது மட்டும் இல்லாமல் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

மேலும் இந்த படம் மலையாளத்தில் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படத்தின் ரீமேக்காம். இந்தநிலையில் கேஎஸ் ரவிக்குமார் பல வருட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் அதிக அளவில் காணப்படுகிறது.

google-kuttappan
google-kuttappan

ஏனென்றால் கேஎஸ் ரவிக்குமார் இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு ‘தெனாலி’ படத்தை தயாரித்தார். அதாவது கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு முன்பு தெனாலிராமன் படத்தை தயாரித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.

தெனாலிராமன் படத்தை தயாரித்ததின் மூலம் கே எஸ் ரவிக்குமாருக்கும் திரைத்துறையில் பெரிய நஷ்டமாக அடி விழுந்தது. அதுமட்டுமில்லாமல் சக நண்பர்கள் படங்களை தயாரித்து எந்த அளவிற்கு கஷ்டப்பட்டார் என்பதை கண் கூட பார்த்ததால் படத்தை தயாரிக்கும் எண்ணத்தின் மீதான ஆர்வமே விட்டுச் சென்றது.

மேலும், ‘தான் படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்ததால் தயாரிப்பதில் கவனம் செலுத்தவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே 21 ஆண்டுகளுக்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எக்கச்சக்கமாக உள்ளதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்