Tamil Cinema News | சினிமா செய்திகள்
முகத்தை மறைத்து, முதுகை காட்டி.. ரசிகர்களை மூழ்கடித்த ஷாலினி பாண்டே!
தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழில் கொரில்லா, 100% லவ், ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஷாலினி பாண்டே. இவருடைய க்யூட்டான சிரிப்பாலும், கன்னக்குழி அழகாலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் மயங்கி கிடக்கின்றனர்.
இருப்பினும் இவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஷாலினி பாண்டே. இந்த சூழலில் இவருடைய படுகவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷியாகியுள்ளார்.
இந்த போட்டோவில், ஷாலினி பாண்டே கடற்கரையில் அமர்ந்தபடி காற்று வாங்குவது போல், தன்னுடைய முதுகுப் புற அழகை ரசிகர்களுக்கு காண்பித்து கிறங்கடித்துள்ளார்.

shalini-pandey-cinemapettai
எனவே இவர் சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் வராமல் இருந்ததால், தற்போது திடீரென்று தனது இந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.
ஆகையால் இந்த போட்டோவானது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
