பாகுபலி ஹீரோயினி அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அதுவரை எந்த ஹீரோயினும் எடுக்காத ரிஸ்க்காக தனது உடல் எடையை பயங்கரமாக ஏற்றினார். ஏற்றியவரால் தனது உடல் எடையை இறக்க முடியவில்லை. இதனால் படவாய்ப்பு குறைந்து அவரின் சினிமா கேரியரை ஆரம்பத்தில் கடுமையாக பாதித்தது.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவரை ஸ்லிம்மாக காட்டவே பல கோடிகள் ஒதுக்கி கிராஃபிக்ஸ் மூலம் அவரை ஸ்லிம்மாக காட்டினர் . இப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுஷ்கா தயக்கம் காட்டுகிறார்.

இந்த நிலை தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு ஏற்பட்டுள்ளது. நடிப்பு திலகம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க அவரைப் போலவே சற்று குண்டாக வேண்டுமென இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிக்க தனியாக பயிற்சி எடுக்க அவருக்காக சிறந்த பயிற்சியாளரை படக்குழு நியமித்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் மறுத்து விட்டாராம்.வேறு வழியில்லாமல் கீர்த்தியை கிராஃபிக்ஸ் மூலம் சற்று குண்டாக்க முயற்சி செய்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here