Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

இளம் நடிகர்களை வசியப்படுத்தும் டிவி நடிகை.. எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காகத்தான்!

actress

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ஒருவர் சமீபகாலமாக இளம் நடிகர்களை மிகவும் அரவணைத்து கொஞ்சி குலாவி கொள்வதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசு கிளம்பியுள்ளது.

டிவியிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் அந்த நடிகை. அதன் பிறகு ஒரு காதல் காமெடி கலாட்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பார்ப்பதற்கு நல்ல உயரமாகவும், கொலுத்த தேகத்துடனும் இருப்பார்.

பார்த்த உடனே பிடித்துப் போகும் அந்த நடிகைக்கு தொடர்ந்து முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு படவாய்ப்புகள் குவிந்தது. கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கே பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஹோம்லி கேரக்டரில் நடிக்கும் இவருக்கு எப்படி இவ்வளவு படவாய்ப்புகள் என விசாரிக்கத் தொடங்கியது நான்கு பேர் கொண்ட குழு.

அப்போதுதான் அந்த நடிகையின் வண்டவாளங்கள் தண்டவாளங்களில் ஏற ஆரம்பித்தது. தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர்களுடன் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறாராம் அந்த நாயகி.

அந்த இளம் நடிகர்களுடன் போன் செய்வது, சேட் செய்வது என எப்போதுமே தொடர்பில் இருக்கும் அந்த நடிகையை தங்களுடைய படங்களில் நடிக்கவைக்க இளம் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.

இதன் காரணமாகவே தற்போது அம்மணிக்கு அளவுக்கு அதிகமான படங்கள் கையில் இருக்கின்றன. ஏற்கனவே 10 படங்கள் நடித்து முடித்துவிட்டார், இன்னும் பத்து படங்கள் கையில் இருக்கின்றன. டிவி நடிகையின் இந்த சாமர்த்தியத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் பொறாமையில் பொங்குகிறார்களாம்.

Continue Reading
To Top