டாக்டர் பட்டம் பெற்ற 7 நடிகர்கள்.. அதில் சிறிய வயதில் பெற்றது இந்த காதல் மன்னன் தான்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பு, தனித்துவமான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற பல அடிப்படையில் நடிகர்களுக்கு பல்கலை கழகங்கள், கலைத்துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களை பார்க்கலாம்.

சிவாஜி கணேசன் : தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமான திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படம் தான். சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை போற்றும் வகையில் 1986ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிவாஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

எம்ஜி ராமச்சந்திரன் : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தமிழ்நாட்டில் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்தவர் எம்ஜிஆர். இவரின் ரசிகர்களால் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் செல்வன், வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். எம்ஜிஆருக்கு
1974 ஆம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

விஜயகாந்த் : கேப்டன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் திரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். 2011ஆம் ஆண்டு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் கேப்டன் விஜயகாந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கமலஹாசன் : நடிப்புக்காக பல அர்ப்பணிப்பு செய்பவர் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு
2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதன்பிறகு 2019 இல்
கலைத்துறையில் 60 ஆண்டுகாலம் பயணம் செய்த மகத்தான சாதனைக்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் கமலஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

விஜய் : தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார் தளபதி விஜய். இவர் திரைப்படத் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்ததற்காகவும் 2007 ஆம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விக்ரம் : விக்ரம் தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கிறார். 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் விக்ரமின் சிறந்த நடிப்பு திறமையை கௌரவித்து டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சிலம்பரசன் : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு திறமைகள் கொண்ட சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 11ம் தேதி நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்