Connect with us

Entertainment | பொழுதுபோக்கு

எம்ஜிஆர் மீது அளவுகடந்த நட்பு.. பட வாய்ப்பை இழந்து தேங்காய் சீனிவாசன்

mgr-thengai-srinivasan

தமிழ் சினிமாவில் நடிகர் நாகேஷ் க்கு அடுத்தபடியாக நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் கல் மனம் என்னும் மேடை நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்திருந்தார்.

அந்த நாடகத்தில் நகைச்சுவையில் சிறப்பாக நடித்ததற்காக பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது அந்த நாடகத்தைக் காண வந்திருந்த நடிகர் தங்கவேலு அவருக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பட்டத்தை அளித்தார்.

அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஒரு விரல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் சந்திரபாபு சென்னை தமிழை சிறப்பாக பேசி நடிக்கும் திறமை கொண்டவர். அவருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சென்னை தமிழை சிறப்பாக பேசும் ஒரே நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தில்லு முல்லு.

மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசன் ஏமாளி முதலாளியாக நடித்திருப்பார். படம் முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில் அவர் சீரியஸான முகத்துடன் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் தேங்காய் சீனிவாசன், எம்ஜிஆர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.

அவர் எம் ஜி ஆருக்காக எதையும் செய்வேன் என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி கூறுவார். அதன் காரணமாகவே அவர் கலைஞர் திரைக்கதை அமைத்த திரைப்படத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தாகவும் ஒரு தகவல் உண்டு. இவர் சிவாஜிகணேசனை வைத்து கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

அப்படத்திற்கு போதிய பணம் இல்லாமல் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆரிடம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். சொந்தப்படம் எடுத்து நஷ்டப்படாதே என்று ஏற்கனவே எம்ஜிஆர், தேங்காய் சீனிவாசனை எச்சரித்துள்ளார்.

அதை சுட்டிக்காட்டிய எம்ஜிஆர் அவரை திட்டி அனுப்பியுள்ளார். இதனால் வருத்தத்துடன் வீட்டிற்கு சென்ற தேங்காய் சீனிவாசனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. எம்ஜிஆர் கொடுத்து அனுப்பியதாக ஒருவர் 25 லட்ச ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். எம்ஜிஆர் தேங்காய் சீனிவாசன் நட்புக்கு உதாரணமாக இந்த சம்பவம் இன்றும் சினிமா உலகில் கூறப்படுவது உண்டு.

mgr thengai srinivasan

mgr thengai srinivasan

Continue Reading
To Top