கேப்டனுக்கு மட்டுமே பயப்படும் லியோ பட நடிகர்.. அடித்துப் பிடித்து ஓடவிட்ட தருணம்

தன் அசத்தலான நடிப்பால் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். நிஜத்திலும் இவர் மக்களின் பேராதரவை பெற்றவர். தன் கம்பீரமான குரலால் பலரையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டவர்.

இதில் 80-90ஸ்களில் வெளிவந்த படங்களில் முக்கிய கதாபாத்திரமான வில்லன் ரோலில் நடித்த மன்சூர் அலிகான் மிகுந்த கோபக்காரர். யாருக்கும் பயப்படாத குணம் கொண்ட இவரை தன் வார்த்தையால் அடக்கிய பெருமை கேப்டனையே சேரும்.

Also Read:இதனால் தான் விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்தேன்.. மனம் நொந்து பேசிய பிரபலம்

அதற்கு உதாரணமாக பார்க்கையில் 1998ல் மம்முட்டி மற்றும் தேவயானி நடிப்பில் வெளிவந்த மறுமலர்ச்சி பட சூட்டிங்கிற்கு வரமாட்டேன் என்று இவர் அடம் பிடித்துள்ளார். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட படக்குழுவினர் மன்சூர் அலிகானை பற்றி கேப்டனிடம் முறையிட்டுள்ளார்கள்.

உடனே அவர் தனக்குரிய ஸ்டைலில் ஏன் நீ சூட்டிங்கிற்கு போக மாட்டியா என்றும் சினிமாவில் நிலைத்து நிற்க விரும்பவில்லையா என்றும் தன் கோபத்தை வெளி காட்டியிருக்கிறார். இதைக் கேட்டு அரண்டு போன மன்சூர் அலிகான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அடித்துப் பிடித்து சென்று இருக்கிறார்.

Also Read:கொழு கொழுவென இருக்கும் நகுல், தேவயானி குழந்தை நட்சத்திர புகைப்படத்தை பார்த்தீர்களா?

அதன்பின் தான் அப்பட ஷூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று இருக்கிறது. இத்தகைய தருணம் மன்சூர் அலிகான் கேப்டன் மீது கொண்ட பயத்தையும் மற்றும் மரியாதையும் வெளிக்காட்டும் விதமாக அமைந்தது.

அந்த வகையில் யாருக்கும் பயப்படாத மன்சூர் அலிகான் கேப்டன் வார்த்தையை மீறாது நடந்த இச்செயல் மக்களை பெரிதும் ஆச்சர்ய பட வைத்துள்ளது. மேலும் லியோ படத்தில் நடித்து வரும் இவர் தன் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம்.

Also Read:நோட்டாவை விட குறைவான வாக்கு பெற்ற மன்சூர் அலிகான்.. உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா!

- Advertisement -spot_img

Trending News