நடிப்பதற்கு லாயக்கே இல்லை என ஒதுக்கப்பட்ட ஏஜென்ட் அமர்.. நடிப்பு அரக்கனாய் மாற இதுதான் காரணம்!

Actor Fahad Fazil: சில வருடங்களுக்கு முன்பு வரை நம்மில் பலருக்கு பகத் பாசில் என்றால் அது நஸ்ரியாவின் கணவராகத்தான் தெரியும். அதிக வயது வித்தியாசத்தில் இளம் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், அவருடைய தோற்றத்திற்காகவும் தென்னிந்திய சினிமாவில் பல விமர்சனங்களை பெற்றிருக்கிறார் இவர். ஆனால் இன்று இவருடைய படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்திருக்கும் அளவிற்கு மக்களின் மனதை ஜெயித்து விட்டார்.

பகத் பாசில் இயக்குனர் பாசிலின் மகன். பாசில் தமிழில் காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர். இயக்குனரின் மகன் என்பதால் பகத்துக்கு சினிமாவில் நுழைவது ரொம்பவும் எளிதாக இருந்தது. 2002 ஆம் ஆண்டு கையெத்தும் தூரத்து என்னும் மலையாள திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார்.

Also Read:உருவ ஒற்றுமையிலும் பகத் பாசிலுக்கு டஃப் கொடுத்த வில்லன்.. நடிப்பிலும் மிரட்டும் பீஸ்ட் பட நடிகர்

எளிதாக வாய்ப்பு கிடைத்த பகத், இந்த படம் ரிலீசுக்கு பிறகு எக்கச்சக்க நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்தார். அவருடைய நடிப்பில் இருந்து தோற்றம் வரை அத்தனையுமே விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதன் பின்னர் அவர் படம் எதுவுமே நடிக்கவில்லை. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கி விட்டார். பட்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி பீனிக்ஸ் பறவை போல் 2009ல் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

2009 ஆம் ஆண்டு இவர் நடித்த கேரள கபே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்குப் பிறகு நிற்க நேரமின்றி அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கண்களாலேயே மொத்த உணர்ச்சிகளையும் காட்டும் அளவிற்கு நடிப்பில் அசத்தி வருகிறார் இவர். ஒவ்வொரு படத்திற்கும் கேரக்டருக்கு ஏற்றவாறு நடிப்பில் வித்தியாசம் காட்டக் கூடிய நடிகர் இவர்.

Also Read:அடுத்த தலைமுறை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்.. மாமன்னனில் கவனிக்கப்பட வேண்டிய 3 விஷயங்கள்

தமிழில் வேலைக்காரன் திரைப்படத்தில் எந்த வசனமும் பேசாமல் முகபாவனையை வைத்தே ஸ்கோர் செய்தார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சமந்தாவின் கணவராக நடித்த பகத், ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை மிரள வைத்தார். அந்த கேரக்டரில் இவரை தவிர வேறு யாரு நடித்து இருந்தாலும் பெரிய ரீச் ஆகி இருக்காது. அதேபோன்று விக்ரம் திரைப்படத்தில், கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையே தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்த பகத் பாசிலின் கேரக்டர் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும் கொண்டாடும் ஒரு நடிகராக தற்போது இவர் இருக்கிறார். எதிர்மறை விமர்சனங்களை கண்டு பயந்து ஓடாமல், விழுந்த இடத்திலேயே எழுந்திருத்து இன்று நடிப்பு அரக்கனாய் மாறி இருக்கிறார் பகத் பாசில்.

Also Read:மாரி செல்வராஜால் ரணகளமாகும் சோசியல் மீடியா.. உண்மையான மாமன்னன் இவர் தான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்