Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உருவ ஒற்றுமையிலும் பகத் பாசிலுக்கு டஃப் கொடுத்த வில்லன்.. நடிப்பிலும் மிரட்டும் பீஸ்ட் பட நடிகர்

மேலும் மலையாளத்தை தவிர்த்து எல்லா மொழிகளிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது

fahadh

Actor Fahadh Fasil: தன் தந்தையின் சிபாரிசில் மலையாள படத்தில் அறிமுகமானவர் தான் பகத் பாசில். மேலும் முன்னணி நடிகராக வலம் வந்து பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு டஃப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் இடம்பெற்ற நடிகரை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் இடம் பெற்று, தன்னை சிறந்த வில்லனாய் அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் பகத் பாசில். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்ட அற்புதமான நடிகர் என்றே கூறலாம்.

Also Read: பிறக்கும்போதே தங்கத்தட்டில் பிறந்த 5 நடிகர்கள்.. கேடு கெட்ட பழக்கத்தால் சொத்தை இழந்த ஜீவன்

மேலும் மலையாளத்தை தவிர்த்து எல்லா மொழிகளிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் விக்ரம் படத்தில் இவர் இடம் பெற்ற கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இந்நிலையில் உருவ ஒற்றுமையிலும் இவருக்கு போட்டியாக களம் இறங்கியவர் தான் ஷைன் டாம் சாக்கோ.

இவர் மலையாள சினிமாவில் முன்னாள் உதவி இயக்குனராய் பணிபுரிந்தவர். மேலும் எண்ணற்ற படங்களில் சப்போட்டிங் ஆக்டர் ஆக நடித்திருக்கிறார். சமீப காலமாக மலையாள படத்தில் இருந்து தமிழ் பக்கம் இவரின் நாட்டம் திரும்பி உள்ளது. அதைத்தொடர்ந்து விஜய் படமான பீஸ்டில் சின்ன கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.

Also Read: அடுத்த தலைமுறை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்.. மாமன்னனில் கவனிக்கப்பட வேண்டிய 3 விஷயங்கள்

அதைத்தொடர்ந்து தெலுங்கு படமான தசரா படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். அப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மீது கொண்ட வெறித்தனமான ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இது போன்ற நெகடிவ் ரோலில் அசித்தி வரும் இவர் தற்போது பகத் பாசிலுக்கு போட்டியாக களம் இறங்கி உள்ளார்.

உருவ ஒற்றுமையில் டஃப் கொடுக்கும் வில்லன்கள்

fahadh-shine tom

fahadh-shine tom

மேலும் உருவத்திலும் அவரைப் போலவே இருப்பதால் பகத் பாசிலின் தம்பி எனவும் இவரை சொல்லலாம் அந்த அளவிற்கு உருவ ஒற்றுமையிலும், வில்லத்தனத்திலும் சரிசமமாய் இருக்கும் இவர்கள் எதிர்காலத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்க, போட்டி போட வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் இடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Also Read: லியோ படத்தால் மாமன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. விஜய்க்கு மட்டும் நடக்கும் அநியாயம்

Continue Reading
To Top