பரத் கேரியரை தூக்கி விட்ட 5 படங்கள்…. பைத்தியக்கார முருகனாக மாறிய கதாபாத்திரம்

தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி இருந்தாலும் அடுத்தடுத்த படவாய்ப்புகள் மூலம் டாப் ஹீரோ ஆனவர். பரத் நடிப்பு மட்டுமில்லாமல், சிறப்பாக நடனமாட கூடியவர். இவர் நடித்த காதல் திரைப்படம் சினிமா கேரியரில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக மாறியது. பரத் இப்போது சிம்பா என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டியல்: இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் பட்டியல். இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார் பரத். அதுவரை சாக்லேட் பாயாக திரையில் தோன்றிய பரத், இந்த படத்தில் அதிரடி ஆக்சனில் கலக்கி இருந்தார்.

Also Read: படமே ஓடல, கைவசம் இத்தனை படங்களா! கேரியரை காப்பாற்ற பரத் தேர்வு செய்த பாதை

காதல்: இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடித்த காதல் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு ரிலீசானது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அதிக வசூலை அள்ளியது. பிலிம் பேரின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பரத்தின் சினிமா கேரியருக்கு வழிவகுத்து கொடுத்ததே இந்த படத்தில் இவர் நடித்த முருகன் கேரக்டர் தான்.

எம் மகன்: 2006 ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், பரத் நடித்து ரிலீசான திரைப்படம் எம் மகன். இந்த படத்தில் அப்பா – மகனுக்கான உறவுச்சிக்கலை எதார்த்தமாக எடுத்து கூறியிருந்தார் பரத். இந்த படம் தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது.

Also Read: பரத் சினிமா கேரியர் காலியானதுக்கு விஜய் பட இயக்குனர் தான் காரணமா? சின்ன தளபதின்னு சோலிய முடிச்சுட்டார்!

செல்லமே: இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் பரத், விஷால். ரீமா சென், பானுப்பிரியா, விவேக் ஆகியோர் நடித்த திரைப்படம் செல்லமே. இந்த படத்தில் பரத் நெகட்டிவ் ரோலில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

கண்டேன் காதலை: ஜப் வி மேட் என்னும் படத்தின் தமிழ் ரீமேக் தான் கண்டேன் காதலை. இந்த படத்தை ஆர் சங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து தமன்னா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

Also Read: வாய்ப்பில்லாமல் ஆரம்பித்த இடத்திற்கே சென்ற பரத்.. நொந்துபோய் கையில் எடுத்த டெக்னிக்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்